இன்று அதிபர் ரணிலை சந்தித்த தமிழரசுக் கட்சி..!
TNA
Sri Lanka
Sri Lankan Peoples
By Kiruththikan
இலங்கை தமிழரசுக் கட்சிக்கும் சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் இன்றைய தினம் சந்திப்பு ஒன்று அதிபர் செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் சிறிலங்கா அதிபருடன் கடந்த காலங்களில் இடம்பெற்ற பேச்சுக்களின் தொடர்ச்சியாக இந்த பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.
இதன்போது கடந்த காலங்களில் தமிழர் தரப்பினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளை விரைந்து நடைமுறைப்படுத்துமாறு தமிழரசுக் கட்சியினால் வலியுறுத்தப்பட்ட நிலையில் அதனை அதிபர் ஏற்றுக்கொண்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கலையரசன் ஐ.பி.சி தமிழுக்கு தெரிவித்தார்..
அதிபரை சந்திக்க திட்டம்

இதன் தொடர்ச்சியாக 19 ஆம் திகதி தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்தவுள்ளதாதகவும் அதன் பின்னர் அதிபரை சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
6ம் ஆண்டு நினைவஞ்சலி