தீயினால் எரிந்து நாசமாகிய வீட்டிற்கு பதில் புதிய வீடு: பிரசன்ன ரணதுங்க எடுத்த முடிவு
தெரணியகல, உடமாலிபொட பிரதேசத்தில் தீயினால் எரிந்து நாசமான சனுகி விஹங்கா என்ற சிறுமிக்கு புதிய வீடொன்றை நிர்மாணிக்க தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் செவன நிதியிலிருந்து ஏழரை இலட்சம் ரூபா வழங்கப்படவுள்ளது.
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் பணிப்புரைக்கு அமைவாக புதிய வீட்டை நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் கேகாலை மாவட்ட முகாமையாளரிடம் அறிக்கை பெற்றுள்ளதாக அதன் தலைவர் ரஜீவ் சூரியாராச்சி கூறுகிறார்.
சிங்கள மக்கள் வசிக்கும் பிரதேசம் வரை ஊடுருவி சென்ற தியாக தீபம் திலீபன் பேரணி : ஆளுநர் விடுத்த பணிப்புரை
இரண்டு மாதங்களுக்குள்
அதன்படி, அடுத்த இரண்டு மாதங்களுக்குள் சிறுமிக்கு புதிய வீடு கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
குறித்த சிறுமியினுடைய வீடு கடந்த (14)ஆம் திகதி இரவு ஏற்பட்ட தீயினால் முற்றாக எரிந்து நாசமானது.
இது தொடர்பில் ஊடகங்கள் மூலம் பிரச்சாரம் செய்யப்பட்டதையடுத்து, அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
சனுகியின் தந்தைக்கு நிரந்தர வேலை இல்லை. அவர்கள் கூலி வேலை செய்து வாழ்க்கை நடத்தினார்கள். வீடு தீயில் எரிந்து நாசமானதால், தற்போது மெழுகு துணியால் மூடப்பட்ட தற்காலிக வீட்டில் வசித்து வருகின்றனர்.
அதனால் புதிய வீடு கட்டுவது அவர்களுக்கு மிகவும் கடினமான வேலையாகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.