யாழில் மருத்துவர் கவனக்குறைவினால் தனது கையினை இழந்த மாணவி பாடசாலைக்கு சமூகம்
Jaffna Hindu Primary School
Jaffna
Jaffna Teaching Hospital
Northern Province of Sri Lanka
Education
By Shadhu Shanker
யாழ்.போதனா வைத்தியசாலை மருத்துவர்கள் மற்றும் தாதியர் ஆகியோரின் அசண்டையீனம் மற்றும் கவனக்குறைவினால் தனது கையினை இழந்த மாணவி பாடசாலைக்கு சமூகமளித்தார் என தகவல் வெளியாகியுள்ளது.
யாழ் இந்து ஆரம்ப பாடசாலை மாணவியான சாண்டில்யன் வைசாலி இன்று (19)மீண்டும் தனது கற்றலைத் தொடர்வதற்காக பாடசாலைக்கு சமூகமளித்தார்.
சிறப்பு வரவேற்பு
இவரை பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், சக மாணவர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர் திரு. சுகிர்தன் ஆகியோர் பூங்கொத்து வழங்கி வரவேற்றார்கள்.
வைசாலி கற்றலைத் தொடர்வதற்கும் அவர் பாடசாலைச் சமூகத்துடன் மீண்டும் ஒன்றித்து வாழ்வதற்கான அனைத்துவிதமான ஊக்கத்தையும் வழங்குவதாக பாடசாலைச் சமூகத்தினர் உறுதியளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்