இலங்கை தமிழரசுக் கட்சியின் இறுமாப்பு : அம்பலமான உண்மை நிலை

Suresh Premachandran Tharmalingam Sitharthan ITAK
By Jaso May 31, 2025 02:47 PM GMT
Report

உள்ளூராட்சி சபைகளில் இலங்கை தமிழரசு கட்சி(itak) நிபந்தனைகள் இன்றி தமக்கு ஆதரவினை வழங்குமாறு கூறுவதாக ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் முக்கியஸ்தரான சுரேஷ் பிரேமச்சந்திரன்(suresh premachandran) தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரியப்படுத்தியுள்ளார். அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

பல்வேறுபட்ட சந்திப்புகள்

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கும் தமிழரசு கட்சிக்கும் இடையில், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கும் இடையில், தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கும் தமிழரசுக் கட்சிக்கும் இடையில் பல்வேறுபட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. ஆனாலும் இறுதியான விடயங்கள் எவையும் எட்டப்படவில்லை. ஆனாலும் ஒருங்கிணைந்து செல்வதற்கு தயாராக இருப்பதாக பல கட்சிகளும் குறிப்பிட்டிருக்கின்றன. நாங்களும் அவ்வாறு குறிப்பிட்டிருக்கின்றோம்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் இறுமாப்பு : அம்பலமான உண்மை நிலை | The Truth About The Arrogance Of The Itak

நிபந்தனைகள் இன்றி ஆதரவு தெரிவிக்க வேண்டும்

 கொள்கை ரீதியாக உடன்பாட்டுக்கு வருவதற்காக அதுசார்ந்த கலந்துரையாடல்களும் இடம்பெறுகின்றது. தமிழரசு கட்சியை பொறுத்தவரை அதனுடைய தலைவராக இருக்கக்கூடிய சி.வி.கே.சிவஞானம், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி முன்வைத்த கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது, குறைந்தபட்சம்கூட அவர்களுக்கு எந்தவொரு இடத்தையும் விட்டு கொடுக்க முடியாது. ஆகவே எந்தவிதமான நிபந்தனைகளும் இன்றி ஆதரவு தெரிவிக்க வேண்டும். மாற்றீடாக நாங்கள் அவர்களுக்கு எதுவும் செய்ய முடியாது என்ற கருத்தை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இணைத் தலைவர்களில் ஒருவரான தர்மலிங்கம் சித்தார்த்தனிடம் கூறியுள்ளார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் இறுமாப்பு : அம்பலமான உண்மை நிலை | The Truth About The Arrogance Of The Itak

கேள்வி நியாயம் இல்லாமல் ஆதரவளிக்க வேண்டும்

   ஆகவே அவர்களைப் பொறுத்தவரையில் எந்தவிதமான கேள்வி நியாயங்கள் இல்லாமல், அவர்கள் கேட்கின்ற ஆதரவுகளை கொடுத்தால் அவர்களுக்கு போதுமானது என்ற கருத்தை தான் அவர்கள் பிரதிபலிக்கின்றார்கள். ஆனால் அதே சமயம் தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்பது கூட்டாக செயல்படுவதற்கு தயாராக இருக்கின்றது என்றும், அது தொடர்பான கொள்கை ரீதியான முடிவுகளை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருக்கின்றது. அந்த கொள்கை ரீதியான விடயங்களை நாங்கள் அவர்களுடன் பேசி இருக்கின்றோம்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் இறுமாப்பு : அம்பலமான உண்மை நிலை | The Truth About The Arrogance Of The Itak

பேச்சுவார்த்தைகள் என்பன இதுவரை முற்றுப் பெறவில்லை. அந்த பேச்சுவார்த்தைகளானது அடுத்த ஓரிரு நாட்களுக்குள் முடிவுக்கு வந்து அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வதற்கான நிலவரங்கள் தோன்றும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம். ஒரு தெளிந்த முடிவுகளுடன் இந்த சபைகள் அமைக்கப்படும் என நாங்கள் எண்ணுகின்றோம் என்றார்.

சுமந்திரன் - கஜேந்திரகுமார் சந்திப்பும் ..! பிள்ளையானுக்கு கடூழிய கண்டமும்

சுமந்திரன் - கஜேந்திரகுமார் சந்திப்பும் ..! பிள்ளையானுக்கு கடூழிய கண்டமும்

தமிழீழ வைப்பகத்தில் வைக்கப்பட்ட தங்க நகைகள் விவகாரம் : சர்ச்சையை கிளப்பும் ஈபிடிபி

தமிழீழ வைப்பகத்தில் வைக்கப்பட்ட தங்க நகைகள் விவகாரம் : சர்ச்சையை கிளப்பும் ஈபிடிபி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!

 

ReeCha
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
15ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்