தமிழர்களுக்கு எதிரானது அல்ல எமது போர்: சுட்டிக்காட்டும் நாமல்!
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராகவே நாங்கள் போர் புரிந்தோம், தமிழ் மக்களுக்கு எதிராகவல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அவ்விடயம் மறக்கப்பட்டிருந்தால் ஞாபகப்படுத்தி கொள்ளவும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்று (21.01.2026) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
புத்தர் சிலை
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், “ இவர்கள் ஒரு பக்கம் பௌத்த பிக்குகளை விமர்சிப்பதோடு எங்கேயாவது புத்தர் சிலை வைக்கப்பட்டு விகாரை அமைத்தால் அதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

ஆனால் நாகதீப விகாரைக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டால் அது இனவாதம் என ஜனாதிபதி கூறுகிறார்.
தமிழ் மக்களுக்கு கதிர்காமத்துக்கு செல்வதற்கான சுதந்தரம் இருப்பது போல் சிங்கள மக்கள் நாகதீப விகாரைக்கு செல்கின்றனர்.
அத்தோடு கத்தோலிக்க மக்கள் மடு தேவாலயத்திற்கு செல்லவும் முடியும்.
அரச தரப்பு எதிர்க்கட்சியில் இருக்கும் போது இருந்த மனநிலையில் இன்றைய சூழலை பார்க்க வேண்டும் இன்று அதெல்லாம் மாறிவிட்டது.” என தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |