கோவிலில் உண்டியலை உடைத்த பெண்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
கோவில் ஒன்றில் உண்டியலை உடைத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட பெண்ணொருவருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
கம்பளையைச் (Gampola) சேர்ந்த 48 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், “நானுஓயா நகருக்கு அருகில் அமைந்துள்ள ஸ்ரீ மருத வீரன் ஆலயத்தில் நேற்று முன்தினம் (16) குறித்த பெண் கோவில் உண்டிலை உடைத்து திருட முற்பட்டுள்ளார்.
விளக்கமறியல்
சாமி சிலைகள், விளக்குகள் மற்றும் கோவில் உண்டியலை உடைத்து உண்டியலில் இருந்த பணம் என்பவற்றை களவாடி இவர் தப்பிச்செல்ல முற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது அப்பிரதேச பொதுமக்களினால் அவர் சுற்றிவளைக்கப்பட்டுள்ளார்.
காவல்துறை அதிகாரி
இதையடுத்து, நானுஓயா காவல்துறை அதிகாரிகளிடம் அவர் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இதன்பின்பு மேற்கொண்ட விசாரணையின் பின்னர் நேற்று (17) நுவரெலியா மாவட்ட நீதிமன்றில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
இந்தநிலையில், நீதிபதி அப்பெண்ணை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை நானுஓயா காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 15 மணி நேரம் முன்
