விகாரையில் சுட்டுக்கொல்லப்பட்ட பிக்கு: பெண்ணொருவர் கைது
கம்பஹா மல்வத்துஹிரிபிட்டிய பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் பிக்கு ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவம் தொடர்பில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மல்வத்துஹிரிபிட்டிய கஹடன ஸ்ரீ ஞானராம விகாரையில் சேவையாற்றி வந்த பிக்கு ஒருவர் கடந்த 23 ஆம் திகதி சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
இந்நிலையில் குறித்த கொலைச்சம்பவத்துடன் தொடர்புடைய பெண்ணொருவர் நேற்று (21) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
கொலைச் சம்பவம்
இதனடிப்படையில் கைது செய்யப்பட்ட அந்த பெண்ணை சந்தேக நபருக்கு உதவுதல் மற்றும் உண்மைத் தகவல்களை மறைத்த குற்றச்சாட்டின் பேரில் தடுத்து வைத்துள்ளதாக சட்ட அமுலாக்க அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
குறித்த பெண் 22 வயதுடையவரெனவும் வேராகல தேவகல பிரதேசத்தைச் சேர்ந்தவரெனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |