முகப்புத்தகத்தின் ஊடாக பாரிய மோசடி: லட்சக்கணக்கில் கொள்ளையடித்த பெண்
வைத்தியர் ஒருவரை மிரட்டி லட்சக்கணக்கில் கொள்ளையடித்த பெண் ஒருவர் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த பெண் பற்றிய தகவல்களை இன்று(22) இலங்கை ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் பிரபல வைத்தியர் ஒருவர் தொடர்பாக முகப்புத்தகத்தில் சிகிச்சைக்கு வரும் பெண்களை தேவையில்லாமல் தொடுவதாக பதிவொன்று வெளியிடப்பட்டுள்ளது.
முறைப்பாடு
இந்நிலையில், அதனை பார்த்த குறித்த வைத்தியர் முகபுத்தகத்தில் உள்ள நண்பர்களிடம் இதை அகற்ற ஆதரவளிக்குமாறு கோரிக்கை விடுத்ததையடுத்து அதனை அகற்றுவதற்கு ஒரு பெண் முன்வந்துள்ளார்.

அதன்படி வைத்தியர் 30 லட்சத்திற்கும் அதிகளவான பணத்தை பகுதி பகுதியாக அந்த பெண்ணுக்கு வழங்கியுள்ளார். ஆனால் அந்தச் சம்பவம் நடந்து சுமார் 3 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு முகபுத்தக பக்கத்தில் வைத்தியரை அவமதிக்கும் பதிவு ஒன்று பரவியுள்ளது.
பின்னர் குறித்த பெண் மீது சந்தேகமடைந்த வைத்தியர் இது தொடர்பாக குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் முறைப்பாடு செய்துள்ளார்.
மேலும், வைத்தியருக்கு உதவிய பெண் பல பிரபலமானவர்களுடன் தொடர்புகளைக் கொண்டவராக குறிப்பிட்டுள்ளார்.
அவர் தனது கணவரை அதிபர் ஊடகப் பிரிவில் உயர் பதவியில் இருப்பவர் என அறிமுகப்படுத்தும் குரல் பதிவையும் காட்டியுள்ளார்.
இலங்கை நாடாளுமன்றத்தில் மொழிபெயர்ப்பாளராகக் காட்டும் அதிகாரபூர்வ அடையாள அட்டையையும் தயாரித்திருந்தார்.
இந்தநிலையில், அந்த அடையாள அட்டையும் போலியானது என உறுதிபடுத்தப்பட்டுள்ளது.