உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி திருட்டு : பயன்பாட்டை முடக்க அதிரடி நடவடிக்கை
உலகிலேயே மிகப்பெரிய கிரிப்டோகரன்சி வர்த்தகத் தளமான "பைனான்ஸ்" (Binance) நேற்று (30) மாபெரும் கொள்ளைக்கு உள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன் மூலம் பைனான்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான 6.3 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான டிஜிட்டல் சொத்துக்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பைனான்ஸ் நிறுவனத்தின் மென்பொருள் பொறியியலாளர் ஒருவரின் மடிக்கணினி ஹேக்கர் ஒருவரின் கைவசம் சிக்கியதை அடுத்தே இந்தத் திருட்டு ஆரம்பமாகியுள்ளதாகத் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
தாக்குதலின் பின்னணியில் வடகொரியா
இதனைத் தொடர்ந்து, பைனான்ஸ் வலையமைப்பில் இருந்த பாதுகாப்பு இடைவெளிகள் ஊடாக ஹேக்கர்கள் அமைப்பினுள் ஊடுருவியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதையடுத்து உடனடியாகச் செயற்பட்ட பைனான்ஸ் நிறுவனம், டெதர் (Tether) உள்ளிட்ட ஏனைய கிரிப்டோகரன்சி நிறுவனங்களுடன் இணைந்து 3 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான தொகையின் பயன்பாட்டை முடக்க நடவடிக்கை எடுத்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன், தனது வர்த்தகத் தளம் ஊடாகக் கிரிப்டோகரன்சியை வெளியே எடுக்கும் சேவையையும் பைனான்ஸ் நிறுவனம் தற்காலிகமாக இடைநிறுத்தியது.

இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள பைனான்ஸ் நிறுவனம், தனது வாடிக்கையாளர்களின் அனைத்து வைப்புகளும் பாதுகாப்பாக இருப்பதாகவும், வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட ஒவ்வொரு இழப்பையும் நிறுவனமே ஈடுசெய்யும் என்றும் தெரிவித்துள்ளது.
இதற்காக 6.3 பில்லியன் டொலர்கள் ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி ரிச்சர்ட் டெங் தெரிவித்தார்.
இந்த ஹேக்கர் தாக்குதலின் பின்னணியில் 'டிரேடர் ட்ரொய்டர்' (TRADER TRAITOR) எனப்படும் வடகொரிய ஹேக்கர் குழு இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சைபர் வெளி ஊடாக நிதித் திருட்டுகளில் ஈடுபட்டு வருமானம் ஈட்டுவதாக வடகொரியா மீது பல ஆண்டுகளாகவே குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
கடந்த காலங்களில் இடம்பெற்ற கிரிப்டோகரன்சி மோசடிகள் தொடர்பில் சைபர் பாதுகாப்பு நிறுவனங்களும், அமெரிக்காவின் எஃப்.பி.ஐ (FBI) அமைப்பும் வடகொரியா மீது குற்றம் சாட்டியிருந்தன. எனினும், அந்தக் குற்றச்சாட்டுகளை வடகொரியா மறுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
திக்திக் நிமிடங்களில் இஸ்ரேல் தேர்தல் முடிவுகள் - பிரதமராவாரா நெதன்யாகு..! இலங்கைத் தமிழ் மக்களுக்கு ஒரு பாடம்
சியாங் பெங் தெரிவிப்பு
டிஜிட்டல் சொத்துக்களை வாங்குவதற்கும், விற்பதற்கும், பரிமாறிக்கொள்வதற்கும் வசதிகளை வழங்கும் பைனான்ஸ் நிறுவனத்தில் உலகம் முழுவதும் பதிவு செய்துள்ள பயனர்களின் எண்ணிக்கை சுமார் 335 மில்லியனாகும்.
2025 ஆம் ஆண்டுக்கான ஆண்டு அறிக்கையின்படி, இந்நிறுவனம் நிர்வகிக்கும் டிஜிட்டல் சொத்துக்களின் மதிப்பு 162.8 பில்லியன் டொலர்களாகும்.
Changpeng Zhao, the co-founder of Binance, said that the world’s largest crypto exchange may have been hacked but that user funds were safe https://t.co/vynkFprZbK
— Bloomberg (@business) October 29, 2026
பைனான்ஸ் நிறுவனத்தின் இந்த கிரிப்டோகரன்சி கொள்ளையை தொடர்ந்து, உலகளாவிய கிரிப்டோகரன்சி சந்தையில் விலைச் சரிவு ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன்போது பைனான்ஸ் கிரிப்டோகரன்சியின் மதிப்பு 5 வீத அளவிலும், உலகின் பிரதான கிரிப்டோகரன்சி அலகான பிட்கொயினின் (Bitcoin) மதிப்பு 3 வீத அளவிலும் வீழ்ச்சியடைந்தன.
திருடப்பட்ட கிரிப்டோ சொத்துக்களை மீண்டும் கைப்பற்றுவதற்காகச் சட்ட நடைமுறைப்படுத்தல் அதிகாரிகளுடன் இணைந்து செயற்பட்டு வருவதாக பைனான்ஸ் இணை நிறுவனரும் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியுமான சியாங் பெங் சாவோ தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |