பரிசு தருவதாக ஏமாற்றி வாட்ஸ்அப்பில் இலட்சக்கணக்கில் பணம் பறித்த பெண் அதிரடி கைது
பெறுமதியான பரிசுப் பொதி வழங்குவதாகக் கூறி, வாட்ஸ்அப் குழுவின் ஊடாக 14 இலட்சத்து 55 ஆயிரம் ரூபாய் பணத்தை மோசடி செய்த சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாகக் கணினி குற்ற விசாரணைப் பிரிவின் வடமேல் மாகாணப் பிரிவுக்குக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கபட்டுள்ளது.
இதனையடுத்து, நேற்று (30) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தின் பயணிகள் முனையத்தில் வைத்து குறித்த பெண்ணை விசாரணை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
மேலதிக விசாரணை
இதன்போது, மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்படும் பெண்ணின் வங்கிக் கணக்கிற்கு பணத்தை வைப்பிலிடச் செய்து மோசடி இடம்பெற்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர் 46 வயதுடைய நுகேகொடைப் பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கணினி குற்ற விசாரணைப் பிரிவின் வடமேல் மாகாணப் பிரிவு முன்னெடுத்து வருகின்றது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |