டித்வா சூறாவளி பாதிப்பு: அடிப்படை உரிமை மனு தொடர்பில் உயர் நீதிமன்றம் அரசுக்கு அதிரடி உத்தரவு
டித்வா (Ditva) சூறாவளியினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து முன்கூட்டியே வானிலை எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தும், அவற்றைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளத் தவறியதாகக் குற்றஞ்சாட்டித் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு தொடர்பில், ஆட்சேபனைகளைச் சமர்ப்பிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கண்டியைச் சேர்ந்த சட்டத்தரணி கீர்த்தி பண்டார கிரிதெனவினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு, நேற்று (30.10.2026) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
தலைமை நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன, நீதியரசர்களான அர்ஜுன ஒபேசேகர மற்றும் கிஹான் குலதுங்க ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் மனு பரிசீலிக்கப்பட்டது.
அரசாங்கம் அடிப்படை உரிமை
இதன்போது, குறித்த வழக்கு தொடர்பில் சட்டமா அதிபர் தரப்பில் பூர்வாங்க ஆட்சேபனைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அரச சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, சட்டமா அதிபர் தரப்பின் ஆட்சேபனைகளுக்கு எதிராக மனுதாரர் தரப்பில் மேலதிக ஆட்சேபனைகள் தாக்கல் செய்ய விரும்பினால், எதிர்வரும் பெப்ரவரி 12ஆம் திகதிக்கு முன்னர் அவற்றைச் சமர்ப்பிக்குமாறு நீதியரசர்கள் குழாம் உத்தரவிட்டது.
இந்த மனுவில் ஜனாதிபதி, அமைச்சரவை உறுப்பினர்கள், வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரிகள், மகாவலி அதிகாரசபை அதிகாரிகள் மற்றும் சட்டமா அதிபர் உள்ளிட்டோர் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.
டித்வா சூறாவளியின் பாதிப்புகளைக் குறைப்பதற்குத் தவறியதன் மூலம் அரசாங்கம் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாகத் தீர்ப்பளிக்குமாறு மனுதாரர் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யானைகளுக்குச் சிகிச்சை அளிக்கும் காட்சிகளைப் பதிவு செய்த விவகாரம் - காவன்திஸ்ஸ யானை விவகாரத்தில் புதிய சர்ச்சை
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |