ஆசிரியையின் நகையை அறுத்து ஏமார்ந்த இளைஞன்
தங்க நகை என நினைத்து சுமார் 500 ரூபா பெறுமதியான போலி நகையை ஆசிரியரிடமிருந்த அறுத்துக் கொண்டு ஓடிய இளைஞன் கைது செய்யப்பட்டதாக ஹிகுருகடுவ காவல்துறையினர் தெரிவித்தனர்.
உவபல்வத்த 6 கணுவ பிரதேசத்தை சேர்ந்த 31 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஆசிரியை முகத்தில் மிளகாய் பொடி வீசி
ஹிகுருகடுவ கொடமுதுன பிரதேசத்தில் வசிக்கும் பசறை நகரிலுள்ள பாடசாலை ஒன்றில் பணிபுரியும் இந்த ஆசிரியை , பாடசாலை முடிந்து பசறை வெல்லவாயவில் இருந்து பேருந்தில் ஹிகுருகடுவ கொடமுதுன பகுதிக்கு வந்து பக்கவாட்டு வீதியில் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்த போது சந்தேக நபர் பின்தொடர்ந்து வந்து ஆசிரியை முகத்தில் மிளகாய் பொடியை வீசிவிட்டு, நகையை தங்க நகை என நினைத்து திருடிச் சென்றதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
போலி நகை
அதேநேரம் ஆசிரியை அலறியதையடுத்து அக்கம்பக்கத்தினர் வந்து தப்பியோடிய சந்தேக நபரை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்ததாகவும் அதில் இருந்த சுமார் 500 ரூபா பெறுமதியான ஆசிரியையின் போலி நகையையும் காவல்துறையிடம் ஒப்படைத்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |