யாழ். மக்களே அவதானம் - நாவலர் வீதி பாபா ஆலயத்தில் நின்ற மோட்டார் சைக்கிளில் நூதன திருட்டு
யாழ்ப்பாணத்தில் (Jaffna) தரித்து நின்ற மோட்டார் சைக்கிளில் சூட்சுமமாக பொருட்கள் திருடப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த திருட்டு சம்பவம் நேற்று (25.09.2025) யாழ்ப்பாணம் காவல் பிரிவிற்குட்பட்ட நாவலர் வீதியில் அமைந்துள்ள சாய்பாபா ஆலயத்தில் இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
சாய்பாபா ஆலயத்திற்கு வழிபாட்டிற்கு வந்த யாழ். நல்லூர் பகுதியைச் சேர்ந்த பக்தரான யுவதியின் மோட்டார் சைக்கிளிலேயே இந்த சூட்சுமமான திருட்டு பதிவாகியுள்ளது.
சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை CCTV காணொளியை வைத்து ஆரம்பித்திருந்தனர்.
குறித்த நபர் மாற்று திறப்புகளை பயன்படுத்தி மோட்டார் சைக்கிளை திறந்து பொருட்களை களவாடிய காட்சி CCTVயில் பதிவாகியுள்ளது.
இந்நிலையில், திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய நபர் யாழ் நுணாவில் பகுதியில் வைத்து சாவகச்சேரி காவல்துறையினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

