யாழ் தெல்லிப்பழை துர்க்கை அம்மனுக்கு இன்று கொடியேற்றம்
வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் - தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தின் (Thellippalai Sri Durga Devi Temple) வருடாந்த மகோற்சவம் இன்று (26) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான மகோற்சவ பெருவிழாவில் இன்று காலையில் இருந்து அம்பாளுக்கு விசேட அபிஷேகங்கள் ஆராதனைகள் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து வசந்த மண்டபத்தில் விநாயகப் பெருமான், துர்க்கை அம்மன், முருகப்பெருமான் ஆகியோருக்கு விசேட பூஜைகள் நடைபெற்று வசந்த மண்டபத்தில் இருந்து மூர்த்திகள் கொடிக் கம்பத்திற்கு எழுந்தருளி தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலய கொடியேற்றம் இனிதே நடைபெற்றது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள்
12 நாட்களைக் கொண்ட இவ்வாலய மகோற்சவத்தில் பத்தாம் நாள் திருவிழாவான எதிர்வரும் 03 ஆம் திகதி சப்பறத் திருவிழா இடம்பெறவுள்ளது.
11ஆம் நாள் திருவிழாவான எதிர்வரும் 04ஆம் திகதி ரதோற்சவமும் 12ஆம் நாள் திருவிழாவான எதிர்வரும் 05 ஆம் திகதி தீர்த்த உற்சவமும் நடைபெற உள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் புலம்பெயர் நாடுகளில் இருந்தும் இவ்வாலய மகோற்சவ பெருவிழாவிற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



