கண்ணீர் சிந்தும் நிலை ஏற்படும் - ரணிலுக்கு எச்சரிக்கை விடுத்த தேரர்
விரைவில் பாரதூரமான அனர்த்தம்
போராட்டத்தின் மூலம் அதிகாரத்திற்கு வந்த அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எச்சரிக்கையான எதிர்வுகூறல் ஒன்றை விடுப்பதாக கலாநிதி ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
இணையத்தளம் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.
மாநாயக்க தேரர்கள் மற்றும் சமய தலைவர்கள் ஆலோசனைகளுக்கு செவிசாய்க்காது தற்போது அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டமானது விரைவில் பாரதூரமான அனர்த்தத்தை எதிர்நோக்கும். கண்ணீர் சிந்தும் கண்களுடன் அதிபர் உட்பட ஆட்சியாளர்கள் அதனை எதிர்நோக்க நேரிடும்.
போராட்டத்திற்காக வீதிக்கு வந்த மக்கள்
40 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இதற்கு முன்னர் மக்கள் போராட்டத்திற்காக வீதிக்கு வந்தனர். அடுத்த போராட்டத்தில் 80 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இணைந்துக்கொள்வார்கள்.
அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு தனது நடவடிக்கைகளை சுதந்திரமாக முன்னெடுத்துச் செல்ல எவராவது இடமளிக்கவில்லை என்றால், அது சம்பந்தமாக நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்தி உடனடியாக நாடாளுமன்றத்தை கலைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சோபித தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.
