இரவுநேர ஊரடங்கால் எவ்வித நன்மையும் இல்லை- வெளிவந்த அறிவிப்பு
கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ள இரவு நேர ஊரடங்கு சட்டத்தினால் எந்தவித நன்மையும் ஏற்படாதென அரச தாதியர் அதிகாரிகள் சங்கத் தலைவர் சமன் ரத்னபிரிய விசனம் வெளியிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா அரசாங்கம் நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தாவிட்டால் சுகாதார தொழிற்சங்கங்கள் வீதிக்கு இறங்கி அரசாங்கத்திற்கு அழுத்தங்களை பிரயோகிக்கும் என அவர் எச்சரித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், கொரோனா தொற்று அனைத்து மாகாணங்களிலும் பரவியுள்ளதால் மாகாணங்களுக்கு இடையில் பயணக் கட்டுப்பாட்டை விதிப்பது பயனற்றது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதனால் நாட்டை ஒரு வாரத்திற்கு முழுமையாக மூடி அனைத்து மக்களுக்கும் கொரோனா பரிசோதனைகளை முன்னெடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.