கடலில் மீன்களை விடவும் இருக்கப்போகும் பொருள் -வெளியான பகீர் தகவல்
2050ஆம் ஆண்டுக்குள் உலகப் பெருங்கடலில் உள்ள பிளாஸ்டிக்கின் அளவு மீன்களை விடவும் அதிகமாக இருக்கும் என கடல் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின்) பொது முகாமையாளர் ஜெகத் குணசேகர தெரிவித்தார்.
கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார். அரசாங்க செய்தித் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:
பெருங்கடல் என்பது நமது வாழ்க்கையோடு இணைந்த ஒரு நல்ல சுற்றுச்சூழல் நிலை கொண்ட பகுதி ஆகும். அதனால்தான் கடல் சூழலைப் பாதுகாப்பது நம் அனைவருக்கும் மிகவும் முக்கியமானது.
கடல் மாசுபடுவதை தடுக்க
நமது இலங்கையை விட எட்டு மடங்கு பெரிய கடல் பகுதியில் கடல் மாசுபடுவதை தடுக்கவும் கட்டுப்படுத்தவும் கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபை பொறுப்பேற்றுள்ளது.
எதிர்கால சந்ததியினருக்கு ஆரோக்கியமான கடல் மற்றும் சுத்தமான கடற்கரைகளை விட்டுச் செல்வதே முக்கிய நோக்கமாகும். மக்களின் புரதத் தேவையில் 60 சதவீதத்திற்கும் அதிகமானவை கடல் வழங்குகிறது என தெரிவித்தார்.
இந்த செய்தியாளர் சந்திப்பில் கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி அசேல பி. றகேவா, அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தினித் சிந்தக கருணாரத்ன, மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர்நளின் ரத்நாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.
