பாபா வங்காவின் கணிப்பு பலித்ததா..! தாக்கியது சுனாமி அலைகள் - அச்சத்தில் மக்கள்
சுனாமி அலைகள் ஜப்பானைத் தாக்கிய நிலையில், புதிய பாபா வங்காவின் கணிப்பு பலித்துள்ளதா என்னும் கேள்வி எழுந்துள்ளது.
இன்று காலை 8.25 மணியளவில் ரஷ்யாவின் கிழக்கு கடற்கரையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 8.7 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
13 அடி உயர சுனாமி அலைகள்
ரஷ்யாவின் கிழக்கு கடற்கரையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்குப் பிறகு ஜப்பானின் கம்சட்கா தீபகற்பத்தில் 13 அடி உயர சுனாமி அலைகள் தாக்கியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜப்பான் வானிலை ஆராய்ச்சி மையம் அவசர எச்சரிக்கைகள் விடுக்க, நாடு முழுவதும் சைரன் ஒலித்தது. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல உத்தரவிடப்பட்டார்கள்.
இதற்கிடையில், ஜப்பானின் புதிய பாபா வங்கா என அழைக்கப்படும் ரியோ டட்சுகி (Ryo Tatsuki) யின் கணிப்பு பலித்துள்ளதா என்னும் கேள்வி எழுந்துள்ளது.
நிலநடுக்கம் ஜப்பானைத் தாக்கும்
1999ஆம் ஆண்டு தான் எழுதிய ’The Future I Saw’ என்னும் புத்தகத்தில், ஜூலை மாதம் 5ஆம் திகதி தெற்கு ஜப்பானைச் சுற்றியுள்ள கடல் கொந்தளிக்கும் என குறிப்பிட்டிருந்தார் ரியோ.
2011ஆம் ஆண்டு ஒரு நிலநடுக்கம் ஜப்பானைத் தாக்கும் என ரியோ கணிக்க, அதேபோல் ஒரு நிலநடுக்கம் 2011ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 11ஆம் திகதி ஆயிரக்கணக்கான உயிர்களை பலிவாங்கியது.
ஆகவே, ஜூலை மாதம் மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஜப்பானைத் தாக்கவிருப்பதாக ரியோ கணித்ததால், ஜப்பானுக்கு சுற்றுலா வர முன்பதிவு செய்துள்ளோர் எண்ணிக்கை கடுமையாக வீழ்ச்சியடைந்தது குறிப்பிடத்தக்கது.
ரியோ குறிப்பிட்ட 5ஆம் திகதி பெரிய அளவில் நிலநடுக்கமும் ஏற்படவில்லை என்றாலும், அவர் சொன்னது போலவே சுனாமி ஏற்பட்டுவிட்டதே என பலரும் வியக்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
