தர்ம போதனை மண்டபத்தில் புதையல் தோண்டிய தேரர் கைது
Sri Lanka Police Investigation
Crime
Arrest
By Sumithiran
தர்ம போதனை மண்டபத்தில் புதையல் தோண்டிக் கொண்டிருந்த தேரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.அனுராதபுரம், கால திவுல்வெவ பகுதியில் உள்ள விகாரையொன்றைச் சேர்ந்த தேரரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.
119 எண் ஊடாக காவல்துறைக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய குறித்த இடத்திற்கு சென்ற காவல்துறையினர் தேரரை கைது செய்தனர்.
நான்கு அடி வரை நிலத்தை தோண்டிய பிக்கு
குறித்த விகாரையைச் சேர்ந்த 47 வயதுடைய தேரர் தர்ம போதனை மண்டபத்தில் தனியாக 04 அடி ஆழம் வரை தோண்டியிருந்ததாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி