மகிந்த ஒருபோதும் அழமாட்டார் :ஆதரவாக களமிறங்கிய தேரர்
"மகிந்த ராஜபக்ச(mahinda rajapaksa) தனது வசிப்பிடத்தை இழப்பதற்காகவோ அல்லது தனது பாதுகாப்பு அதிகாரிகள் குறைக்கப்பட்டதற்காகவோ அழுபவர் அல்ல. அவர் ஒரு சிறந்த தலைவர் என இத்தகண்டே சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வசிக்கும் இல்லத்திற்கு வாடகை செலுத்த வேண்டும் இல்லையெனில் அவர் அந்த இல்லத்தில் இருந்து வெளியேற வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார (anura kumara)தெரிவித்த நிலையிலேயே தேரர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக சேறு பூசும் பிரசாரம்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக சேறு பூசும் பிரசாரம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அவர் புலம்புவதாகவும் அனைவரும் கூறுகின்றனர்.
ஆனால் நாய்க்குட்டிகளைப் போல சிங்கங்கள் சிணுங்குவதில்லை."மகிந்த ராஜபக்ச தனது வசிப்பிடத்தை இழப்பதற்காகவோ அல்லது தனது பாதுகாப்பு அதிகாரிகள் குறைக்கப்பட்டதற்காகவோ அழுபவர் அல்ல. அவர் ஒரு சிறந்த தலைவர். அவரது உத்தியோகபூர்வ இல்லத்தை மதிப்பீடு செய்ய அனுப்பப்பட்ட நபர் சொத்துகள் முகாமைத்துவக் கிளையின் வெறும் எழுத்தராக மட்டுமே இருந்திருக்க வேண்டும்.
ஷங்ரிலா ஹோட்டலில் வாழவேண்டியவர்
மகிந்த, கொழும்பில்(colombo) உள்ள விஜேராமவில் 4.6 மில்லியன் செலவழித்து வாழ வேண்டிய ஒருவர் அல்ல. தேவை ஏற்படின் அவர் கொழும்பில் உள்ள ஷங்ரிலா ஹோட்டலில் ஒரு குடியிருப்பை வாடகைக்கு எடுத்திருக்க முடியும்,".
"எனவே, தற்போதைய தலைவரின் படுக்கைக்கு அருகில் ஈரமான சாக்கு மூட்டையை வைத்து அவரை எழுப்பவும், அவர் இப்போது நாட்டின் ஜனாதிபதி என்பதை நினைவுபடுத்தவும் யாராவது அவருடன் இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்," என்று தேரர் மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |