புலம்பெயர்ந்தோரின் ஈழக் கனவை நனவாக்கும் அரசாங்கம்! கொந்தளிக்கும் தேரர்
அன்று போரின் போது விடுதலைப் புலிகளால் செய்ய முடியாதது இன்று தற்போதைய அரசாங்கத்தின் கீழ் நடப்பதாக அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் சட்டவிரோதமாக நிறுவப்படுவதாக கூறப்படும் பௌத்த மதஸ்தலத்திலிருந்து புத்தர் சிலை அகற்றப்பட்டது குறித்து நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
பௌத்தத்தின் மீதான தாக்குதல்
அத்தோடு, வடக்கு மற்றும் கிழக்கில் பௌத்த தர்மத்தை அழித்து ஈழத்தை நிறுவுவதன் மூலம் புலம்பெயர்ந்தோர் செய்ய விரும்புவதைச் செய்யும் ஒரு அரசாங்கம் தற்போது ஆட்சியில் இருப்பதாகவும் தேரர் குற்றமஞ்சாட்டியுள்ளார்.

தர்ம இலட்சினையுடைய புத்தர் சிலையை காவல்துறையினர் அவ்வாறு எடுத்துச் சென்றது, அம்பிட்டிய தேரருக்கோ அல்லது ஒரு விகாரைக்கான பிரச்சினையோ அல்ல என்று தெரிவித்த அவர், இது முழு நாட்டின் பௌத்தத்தின் மீதான தாக்குதல் என்றும் கூறியுள்ளார்.
அரசாங்கத்தின் உறுதிமொழி
இந்த நிலையில், அரசாங்கம் பௌத்த மதத்தைப் பாதுகாப்பதாக உறுதிமொழி அளிக்கும் வரை, எந்த அரசாங்கத் தலைவர்களையும் விகாரைகளுக்கு அழைத்து வந்து ஆசி பெற வேண்டாம் என்று சங்க உத்தரவைப் பிறப்பிக்குமாறு மகாநாயக்க தேரர்களிடம் அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அப்போது தாங்கள் விடுதலைப் புலிகளால் தாக்கப்பட்டதாகவும், இன்று தற்போதைய அரசாங்கத்தின் கீழ் பாதுகாப்புப் படையினரால் தாக்கப்படுவதாக அச்சமின்றி நாட்டிற்கு அறிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதன்படி, இந்தப் பிரச்சினையை உடனடியாக நிறுத்தாவிட்டால், நாளை வீதிகளில் இறங்குவோம் என்றும் தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்தள விமான நிலையத்தை குறி வைக்கும் அமெரிக்கா 4 நாட்கள் முன்