சுட்டுக் கொல்லப்பட்ட பெண்! வெளியாகும் அதிர்ச்சிகர பின்னணி
புதிய இணைப்பு
மீட்டியாகொட, கிரலகஹவெல சந்திப்பில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பெண் உயிரிழந்துள்ளார்.
சுமார் 4 மாதங்களுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்ட மகாதுர நளினின் சகோதரி இந்த முறையில் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் கரந்தெனிய சுத்தாவின் மைத்துனர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், அதற்கு பழிவாங்கும் விதமாகவே இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முதலாம் இணைப்பு
காலி - மீட்டியாகொட பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
மீட்டியாகொட, கிரலகஹவெல சந்தியில் அமைந்துள்ள உணவகத்துக்கு அருகில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளளது.
இந்நிலையில், குறித்த துப்பாக்கிச் சூட்டில் உணவகத்தின் உரிமையாளரான பெண்ணொருவர் காயமடைந்துள்ளதகாவம் அவர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்தள விமான நிலையத்தை குறி வைக்கும் அமெரிக்கா 4 நாட்கள் முன்