போதைப்பொருளுடன் கைதான யாழ். பல்கலைக்கழக மாணவன்
யாழ்ப்பாணத்தில் (Jaffna) பல்கலைக்கழக மாணவர் ஒருவர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் குற்றத் தடுப்பு காவல்துறையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் யாழ் காவல்துறை போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது நேற்று (16) இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.
இதன்போது, ஊவா பரனகம பிரதேசத்தைச் சேர்ந்த யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் கல்வி கற்கும் இரண்டாம் வருட பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த 24 வயது மாணவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
யாழ் கந்தர்மடம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட குறித்த மாணவனிடம் இருந்து 33 கிராம் 230 மில்லிகிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை இன்றையதினம் (17) யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்திய வேளை எதிர்வரும் 30 திகதிவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்தநிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாராணைகளை யாழ்ப்பாணம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்தள விமான நிலையத்தை குறி வைக்கும் அமெரிக்கா 4 நாட்கள் முன்