மகிந்தவுக்கு பாதுகாப்பு கோரி தேரர் உண்ணாவிரதம்!
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரத்துபஸ்வல தேரிபெஹே சிறிதம்ம தேரர் இன்று உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.
தங்காலை, கார்ல்டன் இல்லத்திற்கு முன்பாக உள்ள டி.எஸ். சேனாநாயக்க சிலைக்கு முன்பாக இன்று (08.10) பிற்பகல் 1 மணியளவில் அவர் உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளார்.
பிற முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பை மீண்டும் வழங்கக் கோரியும் தேரர் இந்த உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வரப்பிரசாதங்கள் நீக்கம்
முன்னாள் ஜனாதிபதிகளுக்கான வரப்பிரசாதங்கள் தற்போதைய அரசாங்கத்தால் நீக்கப்பட்டதையடுத்து, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறி தனது சொந்த ஊரில் உள்ள கார்ல்டன் இல்லத்திற்கு சென்றார்.
இதேவேளை, 2015 ஆம் ஆண்டில் அவருக்கு வழங்கப்பட்ட 2 உத்தியோகபூர்வ வாகனங்களையும் அரசாங்கத்திடம் ஒப்படைத்திருந்தார்.
இவ்வாறான நிலைமைகளால் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்கள் உள்ளதாக அவருடைய ஊடக பேச்சாளர் மனோஜ் கமகே தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரத்துபஸ்வல தேரிபெஹே சிறிதம்ம தேரர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
