மொழியோடும் போர் புரிந்தனர்… 50 ஆண்டுகால நினைவுகள்…

Sri Lankan Tamils Sri Lanka Sirimavo Bandaranaike
By Theepachelvan Jan 11, 2024 11:01 AM GMT
Report
Courtesy: தீபச்செல்வன்

உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் கலந்துகொள்ள வந்தவர்கள், இப்படி படுகொலை செய்யப்படுவார்கள் என ஒருபோதும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் என்று நேற்றைய நினைவேந்தல் நிகழ்வில் மறவன்புலவு சச்சிதானந்தன் பேசியிருந்தார்.

உண்மையில் மொழியைக் கொண்டாட, பண்பாட்டை பகிர்ந்து கொள்ள வந்த அப்பாவிகள் படுகொலை செய்யப்பட்ட அந்த நிகழ்வு இன்றளவும் நெஞ்சை பதற வைக்கிறது.

நேற்று யாழ்ப்பாண நகரத்தில் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலையின் ஐம்பதாவது நினைவேந்தலில் கலந்துகொள்ளுகிற வாய்ப்பு கிட்டியது. அன்றைய காலத்தில் குறித்த படுகொலை நடைபெற்ற போது நிகழ்ந்த பல நினைவுகளை மறவன்புலவு சச்சிதானந்தம் நினைவுபடுத்தினார்.

பிரித்தானிய இளவரசியின் யாழ் விஜயம்: ஊடகவியலாளர்களுக்கு மறுக்கப்பட்ட அனுமதி

பிரித்தானிய இளவரசியின் யாழ் விஜயம்: ஊடகவியலாளர்களுக்கு மறுக்கப்பட்ட அனுமதி


தனிநாயகம் அடிகளாரின் முயற்சி

தவத்திரு தனிநாயகம் அடிகளாரின் முயற்சியினால் 1964ஆம் ஆண்டு இந்தியாவின் புதுடில்லியில் தொடங்கப்பட்ட உலகத் தமிழாராய்ச்சி மன்றம், உலகில் உள்ள தமிழ் அறிஞர்களை ஒன்று திரட்டி, தமிழை வளர்க்கவும் வளம்படுத்தவும் தமிழ் ஆராய்ச்சியை ஒருமுகப்படுத்தவும் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை நடத்த திட்டமிட்டது.

26ஆவது சர்வதேச உலகக் கீழைத்தேயக் கல்வி மாநாட்டின்போதே இதற்கான முயற்சிகள் இடம்பெற்றன. தனிநாயகம் அடிகளாரும், வ.ஐ. சுப்பிரமணியமும் இந்த மாநாட்டில் கலந்துகொண்ட பேராசிரியர்களுக்கு அழைப்பு விடுத்தனர். 1964 ஜனவரி ஏழாம் திகதி உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் முதல் சந்திப்பு டில்லியில் இடம்பெற்றது.

மொழியோடும் போர் புரிந்தனர்… 50 ஆண்டுகால நினைவுகள்… | They Also Fought With Language 50 Years Memories

முதலாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு மலேசியாவிலும் இராண்டாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு தமிழகத்திலும் மூன்றாவது மாநாடு பிரான்சிலும் நடைபெற்றது. பிரான்சில் நடைபெற்ற மாநாட்டில் நான்காவது மாநாட்டை ஈழத்தில் தமிழ் மக்கள் செறிந்து வாழும் யாழ்ப்பாணத்தில் நடத்த திட்டமிடப்பட்டது.

இதன்படி நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு 1974ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3ஆம் திகதி முதல் 9ஆம் திகதிவரை இடம்பெற்றது. தவத்திரு தனிநாயகம் அடிகளாரினால் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் வைத்து வைபவ ரீதியாக நிகழ்வு தொடங்கப்பட்டது.

இஸ்ரேலிற்கு எதிரான இனப்படுகொலை வழக்கு : சர்வதேச நீதிமன்றில் இன்று ஆரம்பம்

இஸ்ரேலிற்கு எதிரான இனப்படுகொலை வழக்கு : சர்வதேச நீதிமன்றில் இன்று ஆரம்பம்


மொழிமீதான ஒடுக்குமுறை

சைவமும் தமிழழும் தழைத்தோங்கிய ஈழத்தில், இஸ்லாமியத் தமிழ், கிறிஸ்தவத் தமிழ் இலக்கியங்களால் செழுமை பெற்ற ஈழத்தில், தனித்துவமான பண்பாடும் பாரம்பரியமும் தொன்மையும் மிக்க ஈழத்தில், உலகத் தமிழாராய்ச்சி மாநாடு பெரும் எழுச்சியாய் நடந்தது.

யாழ் நகரமே பாரம்பரிய பண்பாட்டின் கோலத்தின் காட்சியில் இருந்தது. தாம் பேசும் மொழிக்கு தமிழர்கள் விழா எடுத்தனர். ஈழத்தில் இன ஒடுக்குமுறைக்கான கருவியாக துப்பாக்கிகள் மாத்திரமின்றி மொழியும் பிரயோகிக்கப்பட்டது.

மொழியோடும் போர் புரிந்தனர்… 50 ஆண்டுகால நினைவுகள்… | They Also Fought With Language 50 Years Memories

1956இல் தனிச் சிங்களச் சட்டம் கொண்டுவரப்பட்டது மொழி ஒடுக்குமுறைக்காகவே என்பது வரலாறு. ஈழத் தீவில் தமிழ் மக்களின் அறிவையும் மொழியையும் ஒடுக்கவே தனிச்சிங்களச் சட்டம் கொண்டுவரப்பட்டது.

உலகத் தமிழாராய்ச்சி மாநாடு என்பது உலகளவில் தமிழ் மொழி குறித்த ஆராயச்சி தொடர்பானது. ஆனால் அம் மாநாட்டை கண்ணுற்ற அன்றைய அரசு, ஈழத் தமிழ் இனத்தின்மீது இனவெறி வன்முறை கொண்டு தாக்கியது.

அதுவரை காலமும் ஈழத்தில் தமிழ் மக்கள் தமது அடையாளத்தின் பொருட்டு, எவ்வாறு படுகொலை செய்யப்பட்டார்களோ, அப்படியே இம் மாநாட்டில் கலந்து கொண்டவர்களையும் படுகொலை செய்து உலகத் தமிழாராய்ச்சி போன்ற பண்பாட்டு செயல்களுக்கு ஈழ மக்களுக்கு உரிமையில்லை என்று காட்ட முற்பட்டது.

குருந்தூர்மலை விவகாரம்: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

குருந்தூர்மலை விவகாரம்: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு


மறுக்கப்பட்ட அனுமதி...

இந்தப் படுகொலையின் பின்னணியில் ஆக்கிரமிப்பு அரசியலே இருந்தது. உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகள் அரசியல் தலையீடுகள், நோக்கங்கள் அற்ற வகையிலேயே இடம்பெற்று வந்தது.

யாழில் இடம்பெறும் மாநாட்டிற்கு அன்றைய பிரதமர் சிறிவோ பண்டார நாயக்காவை அழைக்க வேண்டும் என்று தமிழாராய்ச்சி மன்றத்தின் இலங்கைக்கான கிளையில் உள்ள சிலர் குறிப்பிட்டுள்ளனர்.

மொழியோடும் போர் புரிந்தனர்… 50 ஆண்டுகால நினைவுகள்… | They Also Fought With Language 50 Years Memories

ஆனால் பெரும்பான்மையானவர்கள் அதை மறுத்துள்ளனர். இதனால் சிறிமாவுக்கு ஆதரவானவர்கள் கிளையிலிருந்து விலகி மாநாட்டை புறக்கணிப்பதாக தெரிவித்தனர்.

தமிழாராய்ச்சி மன்றத்தின் அகிலத் தலைவர் மாநாட்டை நடத்துதலே மரபாக இருந்தது. இந்த நிலையில் கிளையை விட்டு சிறிமா ஆதரவாளர்கள் விலகினர். இதையடுத்து பேராசிரியர் சு. வித்தியானந்தன் இலங்கை கிளையின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

கட்டடக்கலை விற்பன்னர்களாகிய துரைராஜாவும், கோபாலபிள்ளை மகா தேவாவும் செயலாளர், பொருளாளராகவும் நியமிக்கப்பட்டார்கள். தன்னை விருந்தினராக அழைக்காமை காரணமாக சிறிமாவோ அரசு மாநாட்டை குழப்பத் தொடங்கியது.

இதனையடுத்து அரச பாடசாலை மண்டபங்கள் மறுக்கப்பட்டன. அத்துடன் அப்போது மேயராக இருந்த சிறிமாவின் ஆதரவாளர் அல்பிரட் துரையப்பா யாழ் திறந்த வெளியரங்களில் நிகழ்வுகளை நடத்தவும் அனுமதி தர மறுத்தார்.

நாணய சுழற்சியில் வென்ற சிம்பாப்வே: இறுதி போட்டியில் வெற்றி பெறுமா இலங்கை

நாணய சுழற்சியில் வென்ற சிம்பாப்வே: இறுதி போட்டியில் வெற்றி பெறுமா இலங்கை


சிறிமா அரசின் மோசமான யுக்தி

இந்த மாநாட்டை தோல்வியுறச் செய்ய வேண்டும் என்று நினைத்த சிறிமா அரசு, மாநாடு தொடர்பான செய்திகளை இருட்டடிப்பு செய்தது. ஆனால் இலங்கைத் தீவில் உள்ள தமிழ் திரைமாளிகைகளில் மாநாடு குறித்த செய்திகள் திரையிடப்பட்டன. இதனால் செய்தி பரவலை அரசால் தடுக்க முடியவில்லை.

அத்துடன் உலக நாடுகளில் இருந்து வந்த தமிழ் அறிஞர்களை விமான நிலையத்தில் வைத்து திருப்பி அனுப்பியது அரசு. சர்வதேச தமிழ் அறிஞர்கள் திருப்பி அனுப்பப்பட்ட செய்திகள் இலங்கை அரசின் ஜனநாயக மறுப்புக் கோர முகத்தை உலகிற்கு அம்பலம் செய்தது.

மொழியோடும் போர் புரிந்தனர்… 50 ஆண்டுகால நினைவுகள்… | They Also Fought With Language 50 Years Memories

இலங்கை அரசின் அடக்குமுறைகளைத் தாண்டி, மாநாடு தனியாகம் அடிகளாரால் வைபவ ரீதியாக தொடங்கப்பட்டது. இதற்காக அவர் பல அச்சுறுத்தல்களை, சவால்களை எதிர்கொண்டார்.

மாநாட்டு அமர்வுகள் வீரசிங்கம் மண்டபத்திலும், றிமர் மண்டத்திலும் நடக்க, கலை நிகழ்ச்சிகள் யாழ் திறந்தவெளி அரங்கிலும் நடைபெற்றன. யாழ் சுண்டுக்குளி மகளிர் கல்லூரியில் தமிழர் பண்பாட்டுக் கண்காட்சி இடம்பெற்றது.

ஆறு நாட்களாக யாழ்ப்பாணமே தமிழ் மொழிப் பண்பாட்டுக் கோலத்தில் மிளிர்ந்தது. மக்கள் எழுச்சியாய் திரண்டனர். இதனை கண்ணுற்ற சிங்கள அரசுக்கு பொறுத்துக் கொள்ள இயலவில்லை. 

தமிழ் எழுச்சி கொண்ட ஈழம்

தமிழ்க் கிராமங்கள் எங்கும் தமிழ் பண்பாட்டை வலியுறுத்தும் அலங்கார ஊர்திப் பவனிகள் இடம்பெற்றன. இறுதி நாளன்று முத்திரைச் சந்தியை கடந்து வந்த ஊர்தி பவனியை இலங்கை காவல்துறையினர் மறித்தபோது அந்த இடத்திலேயே அமர்ந்துகொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைக் கண்ணுற்ற காவல்துறையினர் போராட்டத்திற்குப் பணிந்தனர். தம்மால் தடுக்கப்பட்ட இளைஞர், யுவதிகளின் அலங்கார ஊர்திப் பவனியை செல்ல அனுமதித்தனர். எனினும் அதற்கான பழிவாங்கலுக்காக காத்திருந்தனர்.

மொழியோடும் போர் புரிந்தனர்… 50 ஆண்டுகால நினைவுகள்… | They Also Fought With Language 50 Years Memories

இந்த நிலையில் மாநாட்டில் கலந்துகொண்ட சர்வசேத அறிஞர்களை வழி அனுப்பும் நிகழ்வு ஜனவரி 10 அன்று யாழ் திறந்தவெளி அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அந்த நிகழ்வை நடத்த சிறிமாவின் ஆதரவாளர் அல்பிரட் துரையப்பா மறுத்தமை காரணமாக யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நிகழ்வு நடைபெற்றது. வழியனுப்ப சுமார் 50ஆயிரம் பேர் வந்திருந்தனர்.

மண்டபம் நிரம்பிய நிலையில் வெளியிலும் மக்கள் திரண்டு இருந்தனர். பாதையை விட்டு வெளியில் புல் தரையிலிருந்து மக்கள் நிகழ்வை பார்வையிட்டனர். பாதைகள் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தன.  

வன்முறை யுத்தம்

இந்த நேரத்தில்தான் அங்கு வந்த சிறிலங்கா காவல்துறையினர் ஏற்கனவே திட்டமிட்டபடி வன்முறையை கட்டவிழ்த்து விட்டனர். தம்மை புறக்கணித்தமை மற்றும் தமிழ் நிலத்தின் பண்பாட்டு எழுச்சி கண்டு சிங்கள அரசு பெரும் இனவெறியில் இருந்தது.

இதனால் இந்த நிகழ்வில் எப்படியாவது வன்முறையை தோற்றுவிப்பதற்காகவே அனுராதபுரத்திலிருந்து கலகம் அடக்கும் காவல்துறையினர் என்ற வன்முறைக் குழு கொண்டு வரப்பட்டது.

மொழியோடும் போர் புரிந்தனர்… 50 ஆண்டுகால நினைவுகள்… | They Also Fought With Language 50 Years Memories

இந்த நிலையில்தான் யாழ். காவல்துறை அதிபர் சந்திரசேகர தலைமையில் மாநாட்டிற்கு வந்திருந்த அப்பாவிப் பொதுமக்களை காவல்துறையினர் கடுமையாக தாக்கினர். குண்டாந்தடியடிப் பிரயோகம், அளவற்ற கண்ணீர் குண்டுப் புகைப்பிரயோகம் என்பன நிகழ்த்தப்பட்டதுடன், துப்பாக்கிப் பிரயோகங்களும் நிகழ்த்தப்பட்டன.

துப்பாக்கிப் பிரயோகங்களால் மின்கம்பிகள் அறுந்து வீழந்தன. குறி பார்த்துச் சுட்ட மின் கம்பிகள் வீழ்ந்ததில் ஒன்பதுபேர் அந்த இடத்திலேயே படுகொலை செய்யப்பட்டனர்.

பெண்களும் வயது முதிர்ந்தவர்களுமாக பல நூற்றுக் கணக்கானவர்கள் நெரிசலில் சிக்கி காயமுற்றனர். அலை கடலென மக்கள் திரண்டு மாநாட்டிற்காக விழாக்கோலம் பூண்ட யாழ் நகரம் அழுகுரலும் கண்ணீருமாய் காட்சி அளித்தது. 

தைப்பொங்கல் நடக்காத வருடம்

இந்த வன்முறைகள் உலக அளவில் இலங்கை அரசின் கொடிய இன ஒடுக்கல் முகத்தை அம்பலம் செய்தது. இதனால் விசாரணை குழு ஒன்றை அரசு அமைத்தது. ஆனால்  சிறிலங்கா காவல்துறையினர் தண்டிக்கப்படவில்லை. அவர்கள் விசாரணைகளுக்கு ஒத்துழைக்கவும் இல்லை.

தமிழ் மக்களுக்கு இடம்பெறும் அநீதிகளுக்கு சம்பிரதாயபூர்வ விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டு நீதி மறுக்கப்பவடுதுபோல தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலைகளுக்கும் நீதி மறுக்கப்பட்டது. ஈழத் தமிழ் மக்களின் நெஞ்சங்களின் மனதில் ஆறாத வடுவாக இந்தப் படுகொலை நிலைத்தது.

மொழியோடும் போர் புரிந்தனர்… 50 ஆண்டுகால நினைவுகள்… | They Also Fought With Language 50 Years Memories

இப்படுகொலை நடைபெற்ற குறித்த ஆண்டின் தை மாதம், கறுப்பு மாதாகமாக நினைவுகொள்ளப்பட்டது. எவருடைய வீட்டிலும் தைப்பொங்கல் இடம்பெறாது போயிற்று. அந்தளவுக்கு தமிழ் மக்கள் மத்தியில் கூட்டுத் துயரமாக இப்படுகொலை நடைபெற்றது.

அத்துடன் சிங்கள இன வெறி அரசு தமிழ் மக்களை அவர்களின் மொழி சார்ந்த ஒரு பாரம்பரிய நிகழ்வொன்றை நடத்த அனுமதியாது என்ற கோர ஒடுக்குமுறை குணாம்சத்தை உலகிற்கு எடுத்துக் கூறியது.

இலங்கை அரசு தமிழ் மக்களை அரசியல் ரீதியாக ஒடுக்குவதற்கும் அப்பால், மொழி, பண்பாட்டு ரீதியாகவும் தீவிரமாக ஒடுக்குகிறது என்பதை இந்த நிகழ்வு உலகிற்கு தெளிவுபடுத்தியது. இதுவே பின் வந்த காலத்தில் தனித் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கும் அடிகோலிய காரணங்களிலும் ஒன்றானது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


பொறுப்பு துறப்பு!

இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Theepachelvan அவரால் எழுதப்பட்டு, 11 January, 2024 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

ReeCha
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்