பட்டினியால் இரண்டாவது மக்கள் போர் நிச்சயம் வெடிக்கும் - அதன் பின்னணியில் அமெரிக்கா இருக்கும்!
"இலங்கையில் இரண்டாவது மக்கள் போராட்டம் நிச்சயம் வெடிக்கும், அந்தப் போராட்டம் பயங்கரமானதாக இருக்கும். அதன் பின்னணியிலும் அமெரிக்காவே இருக்கும்", என தேசிய இயக்கத்தின் செயலாளர் கலாநிதி வசந்த பண்டார தெரிவித்துள்ளார்.
"கோட்டா கோ ஹோம், ரணில் கம் பெக் என்பதே முதலாவது போராட்டத்தின் இலக்காக இருந்தது. இதில் "கோட்டா கோ ஹோம்" என்பது மட்டுமே வெளியில் தெரிந்தது, "ரணில் கம் பெக்" என்பது திரைமறைவில் இடம்பெற்று வந்தது.
2ஆவது போராட்டம் "ரணில் கோ ஹோம்" என வராது, அது வேறு வடிவில் வரும். அதாவது, ரணில் ஆட்சியில் இருக்கும்போதே வர்க்க வேறுபாட்டால் ஏற்படும் போராட்டமாக அது அமையும்.
பட்டினி, வேலையின்மை உள்ளிட்டவற்றால் மக்கள் வீதியில் இறங்கக்கூடும். மக்கள் உணவுகளைக் கொள்ளையடிக்கலாம், பல்பொருள் அங்காடிகள் உடைக்கப்பட்டு பொருட்கள் களவாடப்படலாம், செல்வந்தர்களின் சொத்துகள் சூறையாடப்படலாம்.
முதலாவது போராட்டத்தில் அதிபர் கோட்டாபய ராஜபக்சவைக் கொலை செய்துவிட்டு லிபியாவைப் போன்று, சர்வதேச தலையீட்டுடன் இடைக்கால ஆட்சியை ஏற்படுத்த முயற்சிக்கப்பட்டது.
அது நிறைவேறாமையினால் தற்போது அடுத்த திட்டம் தீட்டப்பட்டு வருகின்றது.
இது தொடர்பான மேலும் பல செய்திகளை இன்றைய மதிய நேர செய்தித் தொகுப்பில் காணுங்கள்