நீதிபதியின் வீட்டிலிருந்து பெருமளவு நகை ,பணம் கொள்ளை
ஊராபொல போபத்த பிரதேசத்தில் உள்ள மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஒருவரின் வீட்டில் இருந்து ஏழு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா பெறுமதியான தங்கப் நகைகளும் ஆறு இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பணமும் திருடப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்தணகல்ல காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
காவல்துறை விசாரணை

முதற்கட்ட விசாரணையில் நீதிபதி வீட்டில் இல்லை என்றும் வேலையாள் மட்டுமே இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.
காவல்துறை நடத்திய விசாரணையில், வீட்டின் அலுமாரியில் இருந்த சிறிய பெட்டகத்திலிருந்து தங்கப் பொருட்கள் மற்றும் பணம் காணாமல் போனது தெரியவந்தது.
கம்பகா சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ஜகத் ரோஹனவின் பணிப்புரையின் பிரகாரம், அத்தனகல்ல காவல் நிலைய பிரதான காவல்துறை பரிசோதகர் யசேந்திர நாலக தலைமையில் விசாரணை நடத்தப்படவுள்ளது.
முகமாலை நவீன போரியல் விதிகளை மாற்றியமைத்த ஈழத்து ஸ்டாலின்கிராட் 1 மணி நேரம் முன்