திக்கம் வடிசாலை தொடர்பில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானம்
திக்கம் வடிசாலையை மீள இயக்கி, ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட உற்பத்தி நிலையமாக மாற்றுவதற்கான திட்டங்களைத் தயாரிக்கவும், பனை அபிவிருத்திச் சபைக்கும் தனியார் நிறுவனத்துக்கும் இடையிலான ஒப்பந்தத்தின் சட்டவலுவை ஆராயவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இ. சந்திரசேகர், வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன், பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் ஆகியோரின் இணைத் தலைமையில் நேற்று (13.10.2026) ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலிலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.
2022ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட குறித்த ஒப்பந்தம் 25 ஆண்டுகள் நடைமுறையில் இருக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக பனை அபிவிருத்திச் சபையின் தலைவர் தெரிவித்தார்.
ஞானசார தேரரின் காவியுடை விவகாரம் : கம்மன்பிலவின் குற்றச்சாட்டை முற்றாக மறுக்கும் சிறைச்சாலைத் திணைக்களம்
கூட்டுறவுச் சங்கப் பிரதிநிதிகள்
ஒப்பந்தம் தொடர்பில் சந்தேகங்கள் நிலவுவதால், சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனையைப் பெற்று உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க முடிவு செய்யப்பட்டது.

திக்கம் வடிசாலையை நிர்வகிப்பதற்கான அனுமதிப்பத்திரத்தைத் தங்களிடம் வழங்குமாறு கூட்டுறவுச் சங்கப் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்தனர்.
அனுமதிப்பத்திரத்தைச் சங்கத்தின் வசம் வைத்துக்கொண்டு, தனியார் முதலீட்டாளர்களுடன் இணைந்து ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட உற்பத்தியை முன்னெடுப்பதற்கான சாத்தியக்கூறுகளையும் ஆராய்வதற்கு இணக்கம் காணப்பட்டது.
கடந்த காலங்களில் வடிசாலை முடக்கப்பட்டமை மற்றும் தற்போதைய ஒப்பந்தத்தால் சங்க உறுப்பினர்களுக்குப் போதிய நன்மைகள் கிடைக்காத நிலை குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
திக்கம் வடிசாலையை மீள இயக்குவதற்கான சட்டச் சிக்கல்களுக்குத் தீர்வுகண்டு, தேவையான நடவடிக்கைகளை விரைவாக முன்னெடுப்பதற்கும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |