திருமலையில் நடைபெற்ற தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு
Tamils
Trincomalee
Sri Lanka
By H. A. Roshan
தியாக தீபம் திலீபனின் 39ஆவது நினைவேந்தல் நிகழ்வு திருகோணமலை - சிவன் கோயில் மூன்றலில் மூன்றாவது நாளாக முன்னெடுக்கப்பட்டது.
குறித்த இடத்தில் கடந்த 15.09.2026 தொடக்கம் ஒவ்வொரு நாளும் மாலை 5.00 மணி அளவில் செயற்பாட்டாளர்களால் நினைவேந்தல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் நேற்று (17.09.2026) திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் மற்றும் அகரம் மக்கள் மையம் ஆகியோரால் நினைவேந்தல் ஏற்பாடு செய்யப்பட்டது.
மலர் தூவி அஞ்சலி
இதன்போது தியாக தீபம் திலீபனின் திருவுருவப் படத்திற்பு ஈகைச்சுடர் ஏற்றி வைக்கப்பட்டு, பொதுச் சுடரும் ஏற்றிவைக்கப்பட்டதைத் தொடர்ந்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிலையில் 15ஆம் திகதி தொடக்கம் 26 ஆம் திகதி வரை தொடர்ச்சியாக ஒவ்வொரு நாளும் நினைவஞ்சலி மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |