தியாக தீபம் திலீபனின் ஆவண காப்பக நிதித்திரட்டல்! சிலை விவகாரத்தில் காவல்துறை எழுப்பிய கேள்வி
தியாக தீபம் திலீபனின் ஆவண காப்பகம் குறித்து எந்த நெருக்கடிகளையும் இதுவரை வழங்காத காவல்துறை, இன்று அதனை மையப்படுத்தி விசாரணைகளில் கேள்வி எழுப்பியிருந்ததாக யாழ்.மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
தியாக தீபம் திலீபன் சிலை விவகாரம் தொடர்பாக யாழ்ப்பாணம் குற்றப்புலனாய்வு பிரிவினரின் விசாரணைகளுக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இதனை கூறியுள்ளார்.
மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
தெளிவான பதில்
“தானும் நல்லூர் பிரதேச சபை தவிசாளர் மயூரன் இருவரும் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தோம். அதனடிப்படையில் தன்னிடம் நல்லூர் தூபியில் வைக்கப்பட்ட சிலை தொடர்பில் கேள்விகள் எழுப்பப்பட்டது.

இது குறித்து தெளிவான பதிலை நாங்கள் குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு வெளிப்படுதியுள்ளோம். சிலை நிறுவப்படுவது தமக்கு தெரியாது என்றும், அதனை சமூக ஊடகங்கள் மூலமே தெரிந்துக்கொண்டோம் என்பதை சுட்டிக்காட்டினோம்.
மேலும் தியாக தீபம் திலீபனின் ஆவண காப்பகம் உரிய அனுமதிகளை பெற்றே 2023 ஆம் ஆண்டிலிருந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்திருந்தோம்.
அன்றிலிருந்து காவல்துறை தியாக தீபம் திலீபனின் ஆவண காப்பகம் குறித்து எந்த நெருக்கடிகளையும் இதுவரை வழங்கவில்லை என்பதையும் கூறியிருந்தோம்.
அத்தோடு ஆவண காப்பக விடயத்துக்கு எவ்வாறு நிதிகள் திரட்டப்படுகிறது என்பது தொடர்பிலும் கேள்வி எழுப்பியிருந்தனர்.
அதற்கு, இதுவரை காலமும் எந்த ஒரு வெளிநாட்டு தரப்பிடம் இருந்தும் பணத்தை பெற்றுக்கொள்ளாமல் தமது சொந்த செலவியேலே இதனை முறைப்படுத்தி வருகின்றோம் என்பதை கூறியிருந்தோம்” என தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |