'திலீபன் வழியில் வருகிறோம்' ஊர்தி பவனி முல்லைத்தீவை வந்தடைந்தது (படங்கள்)
திலீபனின் நினைவேந்தல்
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நாட்களை நினைவு கூர்ந்து நகர்ந்து வரும் வாகன ஊர்திப் பவனி இன்று முல்லைத்தீவு நகரை சென்றடைந்துள்ளது.
மட்டக்களப்பில் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பேரணி யாழ்ப்பாணத்தை நோக்கி பயணிக்கும் நிலையில் இன்று முல்லைத்தீவு நகரை சென்றடைந்துள்ளது.
பொத்துவில் பிரதேசத்திலிருந்து கடந்த 15 ஆம் திகதி தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் ஆரம்பித்த 'திலீபன் வழியில் வருகிறோம்' என்று ஊர்தி பவனி இன்று நான்காவது நாளாக நகர்கிறது.
மக்கள் அஞ்சலி
முல்லைத்தீவு நகர் பகுதியை சென்றடைந்த ஊர்திக்கு மக்கள் பலர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
குறித்த வாகன ஊர்தி பவனியின் நேற்றைய மூன்றாவது நாள் நிகழ்வுகள் திருகோணமலை மாவட்டத்தின் கிளிவெட்டி, சம்பூர் பகுதியில் இடம்பெற்றன.
இதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் , அக்கட்சியின் திருகோணமலை மாவட்ட முக்கியஸ்தர்கள், பொதுமக்களும் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.