நினைவேந்தலுக்கு எதிராக தமிழில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள்: பின்னணியில் இராணுவ புலனாய்வாளர்கள் (படங்கள்)
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் ஊர்தி பவனி வடக்கு கிழக்கில் மக்களின் நினைவேந்தலுக்காக சென்று வரும் நிலையில் ஊர்தி பவணி மன்னாரை நோக்கி செல்லவுள்ள நிலையில் நினைவேந்தல் பவனிக்கு இடையூறு விளைவித்து, ஊர்தி பவணியை குழப்பும் விதமாக மன்னாரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.
இதன் பொருட்டு இன்றைய தினம்(20) அதிகாலை மன்னார் மாவட்டத்தின் பல பாகங்களில் பரவலாக குறித்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
மன்னார் பொது மைதானம், மன்னார் சதோச மனித புதைகுழி வளாகம், மன்னார் ரெலிகோமுக்கு அருகாமை உட்பட சில பகுதிகளில் குறித்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
குறித்த சுவரொட்டியில்
குறித்த சுவரொட்டியில் மேலும் குறிப்பிடுகையில், தமிழ் ஈழத்திற்காக உண்ணாவிரதம் இருந்து உயிர் தியாகம் செய்த மாவீரன் திலீபனின் தியாகத்தை விற்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யை துரத்துவோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த சுவரொட்டிகள் தேசப்பற்றுள்ள மக்கள் இயக்கம் என்ற பெயரில்
ஒட்டப்பட்டுள்ளது. எனினும் குறித்த சுவரொட்டிகளை மன்னார் மாவட்டத்தில் இராணுவ புலனாய்வாளர்களே
ஒட்டியுள்ளதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
தியாக தீபன் திலிபனின் நினைவஞ்சலிக்கும் ஊர்தி பவணிக்கும் தடை கோரும் வகையில் இந்த சுவரொட்டி நாடகம் இடம் பெற்றிருக்கலாம் என மக்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.