இந்த எட்டு பழக்கங்களும் உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனமாக்கும்

Immune System
By Beulah Aug 06, 2023 10:44 AM GMT
Report

நோயெதிர்ப்பு மண்டலம் நம்முடைய உடலின் அடிப்படை ஆதாரம் ஆகும்.

நம்முடைய உடலில் நோய்கள் ஏற்படாமல் பாதுகாக்கும் கவசம் என்றால் அது இந்த நோயெதிர்ப்பு மண்டலம் தான்.

இதை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டியது முக்கியம். நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமடைவதற்கு அடிப்படையில் இரண்டு முக்கியக் காரணங்கள் இருக்கின்றன.

ஒன்று ஆரோக்கியமற்ற உணவுமுறை, மற்றொன்று வாழ்க்கை முறை. இந்த இரண்டிலும் சில குறிப்பிட்ட விடயங்கள் உங்களுடைய நோயெதிர்ப்பு மண்டலத்தைப் பலவீனப்படுத்தும்.

இதனால், உடலில் நோய்கள் நிலைமைகள் அதிகரிக்க கூடிய நிலை உருவாகும்.

மதுபாவனை

இந்த எட்டு பழக்கங்களும் உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனமாக்கும் | Things That Suppress Your Immune System In Tamil

அதிகமாக மது எடுத்துக் கொள்வது குடல் தசைகளை மோசமாக்கும்.

வயிற்றுத் தசைகளில் டாக்சின்களை அதிகரிக்கச் செய்யும்.

எல்லாவற்றையும் விட மதுபாவனை உங்களுடைய கல்லீரலை சேதப்படுத்த ஆரம்பிக்கும். இதனால் வயிறு மற்றும் குடல் நோய்கள் ஏற்படக்கூடும். ​

புகைப்பிடித்தல்

இந்த எட்டு பழக்கங்களும் உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனமாக்கும் | Things That Suppress Your Immune System In Tamil

புகைப்பிடித்தல் நோயெதிர்ப்பு மண்டலத்தின் எதிரி என்றே சொல்லலாம்.

புகைப்பிடிப்பது உடலின் பல்வேறு நோய்க்குறிகளுக்கு அடிப்படை காரணமாக இருக்கிறது.

புகைப்பிடிப்பதால் ரத்தம் மற்றும் உடலின் பல்வேறு பகுதிகளிலும் டாக்சின்கள் அதிகரிக்கும்.

குறிப்பாக நுரையீரலை சேதப்படுத்தி சுவாச மண்டலத்தை பலவீனப்படுத்தும். அதோடு நோயெதிர்ப்பு மண்டலத்தை மிகவும் பலவீனமடையச் செய்யும். ​

தூக்கமின்மை

இந்த எட்டு பழக்கங்களும் உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனமாக்கும் | Things That Suppress Your Immune System In Tamil

தினமும் குறைந்தது 7-9 மணி நேரமாவது தூங்க வேண்டும். சரியான நேரத்தில் தூங்கி எழுவது மட்டுமின்றி, மிகக் குறைவான அளவு தூக்கமும் உடல் ஆரோக்கியத்தைக் கெடுக்கும்.

போதிய அளவு தூக்கமின்மை பிரச்சினை நோயெதிர்ப்பு மண்டலத்தை மிகவும் மோசமாக்கும்.

அதனால் குறைந்தபட்சம் 7-9 மணி நேர இரவு தூக்கம் அவசியம். ​ ​

ஜங்க் உணவுகள்

இந்த எட்டு பழக்கங்களும் உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனமாக்கும் | Things That Suppress Your Immune System In Tamil

ஜங்க் உணவுகள் சாப்பிடும் போது உடலில் பல்வேறு நோய்களும் நோய் நிலைகளும் உண்டாகின்றன.

குறிப்பாக, உடல் பருமன், உயர் கொலஸ்ரோல் உள்ளிட்ட பல பிரச்சினைகளை உடலில் ஏற்படுத்தும்.

இதனால் நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமடையும்.

​மன அழுத்தம்

இந்த எட்டு பழக்கங்களும் உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனமாக்கும் | Things That Suppress Your Immune System In Tamil

அதிகப்படியான மன அழுத்தமும் கூட நம்முடைய நோயெதிர்ப்பு மண்டலத்தைப் பலவீனப்படுத்தும்.

மன அழுத்தம் என்பது மன ரீதியான பிரச்சினை தானே, அது உடல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்துமா என்று நீங்கள் கேட்கலாம்.

ஆம். மன ஆரோக்கியமும் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனமாக்கும்.

ஏனெனில் மன அழுத்தம் இன்சோம்னியா என்னும் தூக்கமின்மை, மைக்ரேன் என்னும் ஒற்றைத் தலைவலி ஆகியவற்றுக்கு காரணமாக இருக்கிறது. ​

அதிக உடற்பயிற்சி

இந்த எட்டு பழக்கங்களும் உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனமாக்கும் | Things That Suppress Your Immune System In Tamil

தினசரி உடற்பயிற்சி அதிலும் போதிய அளவு உடற்பயிற்சி செய்வது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கச் செய்யும்.

நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும். அதேசமயம் அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்வதும் ஆபத்தானது தான்.

அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்வதும், அதிகமான எடை தூக்கும் பயிற்சி செய்வது ஆகியவை மூட்டுவலி மற்றும் தசைகளில் வலியை ஏற்படுத்தும்.

அதோடு நோயெதிர்ப்பு மண்டலமும் பலவீனமடையும். ​

அதிக மொபைல் பயன்பாடு

இந்த எட்டு பழக்கங்களும் உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனமாக்கும் | Things That Suppress Your Immune System In Tamil

24 மணி நேரமும் ஸ்மார்ட்போனை கையில் வைத்துக் கொண்டு இருப்பவர்கள் தான் இங்கு அதிகம்.

பகல் முழுக்க கம்ப்யூட்டர், இரவில் செல்போன் என ஸ்கிரீன் டைம் அதிகமாக இருப்பவர்களுக்கு நோயெதிர்ப்பு மண்டலம் மிகவும் மோசமடையும்.

அதனால் நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டுமென்றால் உங்களுடைய ஸ்கிரீன் டைமை குறைத்தே ஆக வேண்டும். ​ ​

அதிக அளவு காபி குடிப்பது

இந்த எட்டு பழக்கங்களும் உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனமாக்கும் | Things That Suppress Your Immune System In Tamil

மிதமான அளவில் பிளாக் காபி குடிப்பது மூளையைச் சுறுசுறுப்பாக்கி புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவி செய்யும்.

ஆனால் அளவுக்கு அதிகமாக காபி எடுத்துக் கொள்வது ஆரோக்கியமானது அல்ல.

அளவுக்கு அதிகமாக காபி எடுத்துக் கொண்டால் ஹைபர் டென்ஷன், இதயத் துடிப்பு வேகமாக இருப்பது உள்ளிட்ட பிரச்சினைகளைத் தீர்க்க உதவி செய்யும்.

ReeCha
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025