இலங்கையர்களுக்கு மூன்றாவது தடுப்பூசி அவசியம்!
மூன்றாவது தடுப்பூசியை வழங்குவதற்கான செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டுமென அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் செனால் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
தடுப்பூசிகளை பெற்றுக்கொண்ட சுகாதாரத்துறை ஊழியர்கள் கூட கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வரும் நிலையில்,
மூன்றாவது தடுப்பூசியைப் பெற்றுக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்த சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. .
சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு முன்னுரிமையளித்து மூன்றாவது தடுப்பூசி பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்பதை அரசாங்கத்துக்கு வலியுறுத்துவதாக வைத்தியர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த நிலை தொடர்ந்தால் எமது சுகாதார கட்டமைப்பு பெரும் சவாலுக்கு உட்பட நேரும் என்றும் அதனைக் கருத்தில் கொண்டு சுகாதாரத்துறையினருக்கு முதலில் மூன்றாவது தடுப்பூசியை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.