நாளுக்கு நாள் பின்னடைவுக்கு செல்லும் ரஷ்யா! பேச்சுவார்த்தை திட்டத்திற்கு தயாராகிறாரா புடின் - வெளியான தகவல்
உக்ரைன் போரில் ரஷ்யா கிட்டத்தட்ட 84,210 வீரர்களை இழந்து இருப்பதாக உக்ரைனிய ஆயுதப்படை தெரிவித்துள்ளது.
ரஷ்ய கட்டுப்பாட்டில் இருந்த மற்றும் ரஷ்யாவின் ஒற்றை பகுதியாக அறிவிக்கப்பட்ட கெர்சன் நகரை உக்ரைனிய படைகள் மீண்டும் தங்கள் வசம் கொண்டு வந்துள்ளனர்.
முக்கிய மூலோபாய நகரான கெர்சனை இழந்தது ரஷ்யாவுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படும் நிலையில், பேச்சுவார்த்தைக்கு ஒட்டுமொத்த ரஷ்யாவும், அதன் அதிபர் புடினும் தயாராக இருப்பதாக மாஸ்கோ தொடர்ந்து அறிவித்து வருகிறது.
பேச்சுவார்த்தை
ஆனால் புடின் ஆட்சியில் இருக்கும் வரை உக்ரைன், பேச்சுவார்த்தை மேசையில் ரஷ்யாவுடன் உட்காராது என உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தீவிரமாக அறிவித்துள்ளார்.
போர் சோர்வு மற்றும் ஆயுதங்கள் பற்றாக்குறையால் நாளுக்கு நாள் ரஷ்ய படைகள் பின்னடைவை சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில் உக்ரைனுடனான போர் தாக்குதலில் இதுவரை ரஷ்யா கிட்டத்தட்ட 84,210 வீரர்களை இழந்து இருப்பதாக உக்ரைனிய ஆயுதப்படை தெரிவித்துள்ளது.
ரஷ்ய இழப்புகள்
உக்ரைன் மதிப்பீடுகளின் படி சுமார் 330 ரஷ்ய வீரர்கள் கடந்த 24 மணி நேரத்தில் கொல்லப்பட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது.
அத்துடன் கடந்த சில நாட்களில் ரஷ்யா 1 டாங்கி, 1ஆளில்லா வான்வழி வாகனம், 3 டிரக்குகள் மற்றும் டேங்கர்கள், 2 கவச பாதுகாப்பு வாகனங்கள் மற்றும் 1 பீரங்கி அமைப்பு போன்றவற்றை இழந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
"Never bend your head. Always hold it high. Look the world straight in the eye."
— Defense of Ukraine (@DefenceU) November 20, 2022
Helen Keller
Total combat losses of the enemy from Feb 24 to Nov 20: pic.twitter.com/3l2gTo5z9s
