திருக்கேதீஸ்வர வளைவு உடைப்பு: ஆறு வருடங்களுக்கு பிறகு ஆரம்பமாகும் விசாரணை!
Mannar
Sri Lanka Police Investigation
Law and Order
By Independent Writer
Courtesy: Nayan
மன்னார் திருக்கேதீஸ்வர வளைவு உடைப்பு சம்பவம் தொடர்பில் முதல் முறையாக 10 நபர்களுக்கு எதிராக வழக்கு விசாரணைகள் இடம் பெற்றுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இன்று மன்னார் நீதவான் நீதிமன்றத்திலே திருக்கேதீஸ்வர கோயில் வளைவு 2019-ஆம் ஆண்டு உடைத்த சம்பவம் சம்பந்தமான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
ஆறு வருடங்கள் கடந்த நிலை
ஆறு வருடங்கள் கடந்த நிலையிலேயும் இன்று தான் முதல் தடவையாக மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு 10 பேருக்கு எதிராக இந்த வழக்கு ஆரம்பம்பமாகியுள்ளது.
அதிலே ஒருவர் மரணித்துவிட்டார் மீதம் உள்ள ஒன்பது பேர் விசாரணைக்காக நிறுத்தப்பட்டிருக்கிறார்கள்” என கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

1ம் ஆண்டு நினைவஞ்சலி