கோட்டாபயவை ஆட்சி செய்யவிடாதமையே நாடு திவாலாக காரணம் : சீறுகிறார் பெரமுன எம்.பி
Gotabaya Rajapaksa
Sri Lanka Economic Crisis
Sri Lanka Podujana Peramuna
By Sumithiran
நாட்டின் வங்குரோத்து நிலைக்கு நல்லாட்சி அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
கோட்டாபய ராஜபக்சவை நாட்டை ஆட்சி செய்ய விடாத காரணத்தினாலேயே இன்று இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக பண்டார குறிப்பிட்டார்.
ராஜபக்சாக்களை தவிர வேறு எவரும் அவமானப்படுத்தப்படவில்லை
நல்லாட்சி அரசாங்கம் நாட்டை கடன் வலையில் சிக்க வைத்ததினால் நாட்டின் திவால் நிலைக்காக தற்போது அவர்களே பொறுப்புக்கூற வேண்டியவர்கள் என தெரிவித்தார்.
இந்த நாட்டில் ராஜபக்சாக்களை தவிர வேறு எந்தக் குழுவும் அவமானப்படுத்தப்படவில்லை என்று கூறிய ரஞ்சித் பண்டார, அப்பாவி மக்களுக்கு நிவாரணம் வழங்கச் செயல்பட்டதால்தான் அவர்கள் அவமானப்படுத்தப்படுகிறார்களே தவிர வேறு எந்தக் காரணமும் இல்லை என்றும் தெரிவித்தார்.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி