இது ராஜபக்ச அரசாங்கம் அல்ல - அமைச்சரவைப் பேச்சாளர் வெளியிட்ட அறிவிப்பு
Bandula Gunawardane
Gotabaya Rajapaksa
Mahinda Rajapaksa
Sri Lanka
By Sumithiran
தற்போது அமைக்கப்பட்டுள்ள அரசாங்கம் ராஜபக்ச அரசாங்கம் அல்ல என அமைச்சரவைப் பேச்சாளர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று (மே 24) அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்கு அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைத்து தரப்பினரையும் ஒன்றிணையுமாறு அரச தலைவர் அழைப்பு விடுத்துள்ளார்.
அதற்கமைவாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி,ஐக்கிய மக்கள் சக்தி,மற்றும் சுயாதீன குழுக்களை அரசில் இணையுமாறு வற்புறுத்திய நிலையில் அவர்கள் அவ்வாறு செயற்படாத வேளையில் அமைச்சர்கள் தமது பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், இந்த சவாலை சிலர் எதிர்கொள்ள நேரிட்டுள்ளதாகவும் அமைச்சரவைப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 8ஆம் நாள் மாலை திருவிழா

5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி