திலீபனின் ஊர்தி மீது தாக்குதல் : யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியம் கடும் கண்டனம்
திருகோணமலையில் தியாகதீபம் திலீபனின் நினைவேந்தி அவரது உருவப்படத்தை தாங்கி வந்த ஊர்திப் பவனி மீது சிங்கள அடிப்படை வாதக்குழுக்களினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை மாணவர் சமூகமான நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம் என யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
திலீபனின் உருவப்படத்தை தாங்கி வந்த ஊர்தியானது தமிழர் தலைநகரிலேயே தாக்கப்பட்ட இந்தச் சம்பவமானது வடகிழக்கு மாகாணங்களில் இன்னமும் தமிழ் மக்களுக்கு அவர்களது குறைந்த பட்ச நினைவுகூரும் உரிமை கூட மறுக்கப்பட்டு வருகின்றது என்பதற்கு சாட்சியமாகும்.
மேலும், அகிம்சையைப் பற்றிப் போதித்து அகிம்சாவாதிகளிற்கும் ஜனநாயகவாதிகளிற்கும் முன்னுதாரணமாக விளங்கும் தியாக தீபம் திலீபன் அண்ணாவின் இந்த நினைவேந்தலை தாக்கும் சிங்கள அடிப்படைவாதக் கும்பல்களைப் பார்த்தாவது உலகச் சமூகமும் நம் மக்களும் நமது இந்த நிலை பற்றி சிந்தித்துப் பார்க்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

திருகோணமலையில் தாக்கப்பட்ட தியாகதீபம் திலீபன் ஊர்தி: கிழக்குப் பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் ஒன்றியம் கடும் கண்டனம்(காணொளி)


ஈழத் தமிழரின் நீதிக்காய் போராடிய இறைவழிப் போராளி!
2 நாட்கள் முன்