ஈழத்துக் கலைஞர்களின் அரிய படைப்பு
video
music
thoduthooram
By Vanan
ஈழத்து இசையமைப்பாளர் ஜெயந்தன் விக்கி இசையமைத்து பாடி நடித்துள்ள தொடுதூரம் பாடல் ஒக்டோபர் எட்டாம் திகதி வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
KM ப்ரொடக்சன்ஸ் கணேசலிங்கம் குவேந்திரன் தயாரிப்பு மற்றும் வரிகளில் உருவான இந்தப் பாடலை பிரபல ஈழத்து ஒளிப்பதிவாளர் ரிஷி செல்வம் இயக்கி படமாக்கியுள்ளார்.
இப்பாடலில் கதாநாயகியாக நடிகை, மோடல் தீபிகா குணசேகரன் நடித்துள்ளதுடன், ஜெயந்தனுடன் இணைந்து இப்பாடலினை பிரபல பாடகியும் சங்கீத விரிவுரையாளருமாகிய மதுஸ்ரீ ஆதித்தன் பாடியுள்ளார்.
தொலைதூரத்தில் உள்ள போதும் நினைவினால் ஒன்றித்து இருக்கும் தற்போதைய டிஜிட்டல் காதலில் இருக்கும் சின்ன சின்ன விஷயங்கள் அனைத்தையும் மிகவும் அழகாக படமாக்கியுள்ளனர்.
இப்பாடலினை கண்டு மகிழ கீழே உள்ள இணைப்பை அழுத்துங்கள்...