தேசபந்துவிற்கு வந்த கொலை மிரட்டல்: சிஐடிக்கு கிடைத்த அனுமதி
பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு வந்துள்ள கொலை மிரட்டல் தொடர்பில் இரண்டு சிறை கைதிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்வதற்கு குற்றப்புலனாய்வு திணைக்களம் அனுமதி பெற்றுள்ளது.
அதன்படி, தேசபந்து தென்னகோன் தனது பதவியில் உத்தியோகபூர்வ கடமைகளைச் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதால், அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணையை தொடங்கியுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கை அளித்துள்ளது.
கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் பூஸ்ஸ சிறைச்சாலையில் உள்ள இரண்டு சந்தேக நபர்களிடமிருந்து வாக்குமூலங்களைப் பதிவு செய்ய கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுரவிடம் திணைக்களம் உத்தரவு பெற்றுள்ளது.
அச்சுறுத்தல்கள்
தேசபந்து தென்னகோனின் ஹோகந்தரவில் உள்ள வீட்டிற்குச் சென்ற இரண்டு மூத்த காவல்துறை அதிகாரிகள், பாதாள உலகக் குழு தலைவர் காஞ்சிபாணி இம்ரானிடமிருந்து அவருக்கு அச்சுறுத்தல்கள் வரக்கூடும் முன்னர் அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில், வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள காஞ்சிபாணி இம்ரான், தென்னகோனைக் கொலை செய்ய தனது நெருங்கிய கூட்டாளிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் மேலும் கூறியுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
