இலங்கையில் அடிப்படை மனித உரிமைகளுக்கு அச்சுறுத்தல் - லால் விஜேநாயக்க
இலங்கையில் வாழும் உரிமை மற்றும் அடிப்படை உரிமைகள் தற்போது அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக ஜனநாயகத்திற்கான சட்டத்தரணிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் தமது உரிமைகளுக்காக குரல் கொடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக, குறித்த அமைப்பின் தலைவர் சட்டத்தரணி லால் விஜேநாயக்க(Lal Wijenayake) தெரிவித்துள்ளார்.
கொழும்பை அண்மித்த - மஹர சிறைச்சாலையில் பல சிறைக் கைதிகள் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் எதுவும் நடத்தப்படவில்லை லால் விஜேநாயக்க தெரிவித்துள்ளார்.
இவ்வாறான சம்பவங்கள் வாழ்வதற்கான உரிமை உள்ளிட்ட மனித உரிமைகளுக்கு அச்சுறுத்தல் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது ஒரு ஆபத்தான முன்னுதாரணம் எனவும், நிலைமை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
பொதுமக்களின் தலையீடு மற்றும் உரிமை மீறல்களுக்கு எதிராக பொதுமக்கள் குரல் எழுப்பி வீதியில் இறங்குவதன் மூலமே மனித உரிமை மீறல்களை தடுத்து நிறுத்த முடியும் என லால் விஜேநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.
