யாழ். ஊடகவியலாளருக்கு மிரட்டல் : இளங்குமரன் எம்.பி கண்டனம்!
யாழ்ப்பாண மாவட்ட ஊடகவியலாளரான சுமித்தி தங்கராசாவின் தொழில்பணிகளைத் தடை செய்யும் வகையில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பாக, நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் (K. Ilankumaran) வன்மையாக கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டதாவது: “ஊடகவியலாளர்கள் தங்கள் கடமைகளை சுதந்திரமாகவும் இடையூறு அற்ற வகையிலும் மேற்கொள்ளும் உரிமை ஜனநாயகத்தின் அடிப்படை அம்சமாகும்.
இத்தகைய மிரட்டல்கள் ஊடகச் சுதந்திரத்தை மட்டுமன்றி, ஜனநாயகத்தின் அடித்தளத்தையே பாதிக்கும் ஆபத்தான நிகழ்வாகும்.
ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பு
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக விசாரணை நடத்தி, குற்றத்தை நிகழ்த்தியவர்களுக்கு எதிராகச் சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
ஊடகவியலாளர்கள் பாதுகாப்பான சூழலில் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றுவதற்காக தற்போதைய அரசாங்கம் தேவையான பாதுகாப்பை உறுதிசெய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது,” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
