விடுதலைப் புலிகள் காலத்தை விட மோசமான நிலை - அரசை கடுமையாக சாடும் மொட்டு
விடுதலைப் புலிகள் செயற்பட்ட காலத்தை விட மோசமான சூழ்நிலைக்கு நாடு நகர்ந்துள்ளதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தற்போது நடைபெறும் கொலைகளை அரசாங்கம் சாதாரணமாக சித்தரிக்க முயற்சிப்பதாக சாகர காரியவசம் (Sagara Kariyawasam) குற்றம் சுமத்தியுள்ளார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நேற்று நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
ஜே.வி.பி.யின் பயங்கரவாத நிலை
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், 1988-89 காலகட்டத்தில் ஜே.வி.பி.யின் பயங்கரவாத நிலையை நோக்கி நகர்ந்து வருவது இப்போது தெளிவாகத் தெரிகிறது.
கொலைகளை மிகவும் பொதுவான விஷயமாக்க அரசாங்கம் முயற்சிக்கிறது. கொல்லப்படுபவர்கள் போதைப்பொருட்களில் ஈடுபட்டவர்கள் அல்லது பாதாள உலகில் ஈடுபட்டவர்கள் என்று கூறி அரசாங்கம் மிக எளிதாக அதிலிருந்து தப்பிக்க முயற்சிக்கிறது.
கொள்கலன் சம்பவத்தில் நடந்த மோசடியை முதன்முதலில் அம்பலப்படுத்திய டான் பிரியசாத் தனது சொந்த வீட்டிலேயே வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.
அந்தக் கொலைகள் அனைத்தும் மிகவும் எளிமையான முறையில் மறைக்கப்படுகின்றன. இந்தக் கொலைகளுக்குப் பின்னால் இந்த அரசாங்கம் உள்ளது.
ஒரு பாசிச ஆட்சி
ஒரு பாசிச ஆட்சியை உருவாக்கும் நோக்கத்திற்கான முக்கிய அடிப்படை நிபந்தனை இது தானா என்பதில் எங்களுக்கு பெரும் சந்தேகம் உள்ளது.
பாசிச ஆட்சியால் அதன் எதிரிகளை அடக்க முடியாத போது, அடையாளம் தெரியாத துப்பாக்கி ஏந்தியவர்கள் மூலம் அவர்கள் கொலைச் செய்யப்படுகின்றார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
