இலங்கையில் ஊடகவியலாளர்கள் மீது கடுமையான அச்சுறுத்தல்! (படங்கள்)

attack Sri Lanka journalists
By Vanan Feb 14, 2022 05:26 PM GMT
Report

இலங்கையில் ஊடகவியலாளர்கள் மீது தொடர்ந்து கடுமையான அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருவதனை கடந்த நாட்களில் அவதானிக்க முடிந்துள்ளது.

அந்த வகையில், கடந்த ஒரு வாரத்திற்குள் மட்டும் மூன்று ஊடகவியலாளர்கள் மீது மிகக் கடுமையான விசாரணைகள் மற்றும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இன்று, தென்னிலங்கையைச் சேர்ந்த ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவின் வீட்டின் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் ஊடகவியலாளர்கள் மீது கடுமையான அச்சுறுத்தல்! (படங்கள்) | Threats On Journalists In Sri Lanka

அதேபோல், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளர் மற்றும் செல்வக்குமார் நிலாந்தன் மீது மீண்டும் ஏறாவூர் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் தீவிர விசாரணைக்கு உட்படுத்தி உள்ளனர்.

இலங்கையில் ஊடகவியலாளர்கள் மீது கடுமையான அச்சுறுத்தல்! (படங்கள்) | Threats On Journalists In Sri Lanka

இதேபோல் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் பொருளாளரும் உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் இணைப்பு செயலாளருமான ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி சசிகரன் மீதும் தொடர்ச்சியாக விசாரணைகள் நடைபெற்று அவருக்கு, அண்மையில் மட்டக்களப்பு காவல்துறையினரால் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் நீதிமன்றத்தில் தடை உத்தரவு பிறப்பித்திருந்தனர்.

இலங்கையில் ஊடகவியலாளர்கள் மீது கடுமையான அச்சுறுத்தல்! (படங்கள்) | Threats On Journalists In Sri Lanka

இவ்வாறு இலங்கையில் தொடர்ச்சியாக ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் மீதான அழுத்தங்கள் தொடர்ந்து கொண்டே செல்கிறது.

அதிலும் மேற் கூறப்பட்ட ஊடகவியலாளர் மீது வெவ்வேறு காரணங்களுக்காக, வெவ்வேறு தரப்பினரால் பல்வேறு வகையான அச்சுறுத்தல்களை ஏற்படுத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

அநீதிகளுக்கு எதிரான உண்மைகளை வெளிக்கொண்டு வந்தார்கள் என்ற காரணத்திற்காகவே இவர்கள், பல தடவைகள் விசாரணைகள் என்ற போர்வையில் பாதுகாப்பு தரப்பினரால் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

ஊடகவியலாளர் மீதான தாக்குதல்கள், விசாரணைகள் குறித்து மனித உரிமை அமைப்புகள் மற்றும் அரசியல் தலைவர்கள் கட்டணங்களை வெளியிட்டு வரும் நிலையில்,

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் விசாரணைகள் என்ற போர்வையில் தொடர்ச்சியாக அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகி வருவது தொடர்பாக யாரும் கவனம் செலுத்த வில்லை என்ற குற்றச்சாட்டுக்களும் எழுந்துள்ளன.

தமிழ் ஊடகவியலாளர் மீது அச்சுறுத்தல்கள் விடுக்கப்படும் போது சிங்கள ஊடகங்கள் மற்றும் ஊடக அமைப்புக்கள் குரல் கொடுப்பது குறைவு என பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.



GalleryGalleryGalleryGallery
ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026