இந்தியர் உட்பட வெளிநாட்டிலிருந்து வந்த மூவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
டுபாயிலிருந்து(dubai) கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கிய பெண் ஒருவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைது நடவடிக்கை நேற்றும் (17) இன்று அதிகாலையும்(18) இடம்பெற்றுள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் இந்திய(india) பிரஜை ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
வெளிநாட்டு சிகரெட்டுகளை கடத்த முயற்சி
இவர்கள் மூவரும் வெளிநாட்டு சிகரெட்டுகளை கடத்த முயன்றதாக கிடைத்த உளவுத்துறை தகவலின் அடிப்படையில், கட்டுநாயக்க விமான நிலைய காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (PNB) நடத்திய தனித்தனி சோதனைகளில் இந்த கைதுகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன்படி பெப்ரவரி 17 ஆம் திகதி, டுபாயிலிருந்து வந்த 51 வயது இந்தியர் ஒருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் (BIA) வருகை முனையத்தில் கைது செய்யப்பட்டார். சந்தேக நபர் சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட 15,000 வெளிநாட்டு சிகரெட்டுகளை (75 அட்டைப் பெட்டிகள்) வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மேலதிக விசாரணை
அதேபோன்று பெப்ரவரி 18 ஆம் திகதி நடந்த மற்றொரு நடவடிக்கையில், டுபாயிலிருந்து கடத்தப்பட்ட 21,200 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் (106 அட்டைப் பெட்டிகள்) ரஸ்நாயக்கபுராவைச் சேர்ந்த 23 வயது நபர் வருகை முனையத்தில் கைது செய்யப்பட்டார்.
அதே நாளில் நடத்தப்பட்ட தனி சோதனையில், டுபாயிலிருந்து 46,800 வெளிநாட்டு சிகரெட்டுகளை (234 அட்டைப் பெட்டிகள்) கடத்த முயன்றதற்காக பன்னிப்பிட்டியவைச் சேர்ந்த 48 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
மூன்று சம்பவங்கள் குறித்தும் கட்டுநாயக்க விமான நிலைய காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
