நெடுந்தீவு கடற்படையினரால் மூவர் கைது
police
arrested
srilankan
navy
neduntheevu
By Kalaimathy
நெடுந்தீவு கடற்படையினரால் இன்று அதிகாலை 2.30 மணியளவில் நெடுந்தீவு கடலில் வைத்து ஒரு கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெடுந்தீவு கடற்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போதே குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் இருவர் நாச்சிக்குடா பகுதியைச் சேர்ந்தவர் எனவும், ஒருவர் கொடிகாமத்தையும் சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணைகளின் பின்னர் கடற்படையினர் அவர்களை நெடுந்தீவு காவல் நிலையத்தில் ஒப்படைக்கவுள்ளதாக தெரியவருகிறது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி