வவுனியாவில் கைது செய்யப்பட்ட வைத்தியர்! வெளியான காரணம்
Sri Lanka Police
Vavuniya
Sri Lanka
By pavan
வவுனியாவில் விசேட புலனாய்வு பிரிவினரிடம் புதையல் தொடர்பான ஸ்கேனர் இயந்திரம் ஒன்றை 15 இலட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்ய முயன்ற மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைது சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
காவல்துறை விசாரணை
34 வயதுடைய மதாவாச்சியை சேர்ந்த வைத்தியர் , 38வயதுடைய வவுனியா மணிபுரம் பகுதியை சேர்ந்த நபர் மற்றும் வவுனியா கூமாங்குளம் பகுதியை சேர்ந்த 31வயதுடைய இளைஞர் ஆகிய மூவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட ஸ்கேனர் இயந்திரம் மற்றும் அதற்காக பயன்படுத்தப்பட்ட இரண்டு சொகுசு வாகனங்களையும் காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில் விசாரனைகளின் பின்னர் வவுனியா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி