யாழில் மூன்று இளைஞர்கள் போதைபொருளுடன் சுற்றிவளைப்பு
யாழ்ப்பாணத்தில் போதைப் பொருட்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை குருநகர் பகுதியில் நேற்று (04) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவத்தில் 24, 26 மற்றும் 28 வயதுகளையுடைய இளைஞர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவரகையில், யாழ்ப்பாணத்தின் தொடர்ச்சியாக போதைப்பொருள் அழிப்பு நடவடிக்கைகள் காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்தநிலையில் யாழ்ப்பாணம் காவல்துறை புலனாய்வு பிரிவினருக்கு குறித்த இளைஞர்கள் தொடர்பில் இரகசிய தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, யாழ்ப்பாணம் காவல்துறை போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
இதையடுத்து, குறித்த மூன்று இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞர்களிடம் இருந்து 30 மில்லிக்கிராம் கெரோயின் 1000 மில்லிக் கிராம் கஞ்சா மற்றும் ஐந்து போதை மாத்திரைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் காவல“துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ நிலம் உள்ளவரை நித்தியப்புன்னகை அழகனின் குரல் தீராது! 2 நாட்கள் முன்