அமெரிக்காவில் விழுந்து நொருங்கியது விமானம் பயணித்த இஸ்ரேலியர்கள் உயிரிழப்பு
அமெரிக்காவில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வேளை வோஷிங்டன், டி.சி.க்கு கிழக்கே 20 மைல்களுக்கும் குறைவான தொலைவில் ஒரு சிறிய விமானம் விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழந்தனர்.
குறித்த விமானத்தில் உயிரிழந்தவர்கள் இஸ்ரேலியர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
பயிற்சி நடவடிக்கையின்போது விபத்து
மேரிலாந்து மாநில காவல்துறை, அந்த விமானம் மேரிலாந்தின் மான்ட்கோமெரி கவுண்டியில் உள்ள ஒரு விமானப் பயிற்சிப் பள்ளிக்குச் சொந்தமானது என்றும், மேரிலாந்தின் போவியில் விபத்துக்குள்ளானபோது அது ஒரு பயிற்சி நடவடிக்கையில் இருந்திருக்கலாம் என்றும் நம்புவதாகக் கூறியது.

விபத்துக்குள்ளான விமானம், நியூ ஜெர்சியின் ஓஷன் சிட்டியில் இருந்து புறப்பட்டு, மேரிலாந்தின் மான்ட்கோமெரி கவுண்டிக்குச் சென்று கொண்டிருந்ததாக புலனாய்வாளர்கள் நம்புகின்றனர்.
விபத்து நடந்த நேரத்தில் விமானியும் இரண்டு பயணிகளும் மட்டுமே விமானத்தில் இருந்ததாக அதிகாரிகள் நம்புகின்றனர். யாரும் உயிர் தப்பவில்லை.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |